Blue Sattai Maran Mangalavaaram Review: அடல்ட் ஒன்லி படம்.. ’செவ்வாய்க்கிழமை’ ப்ளூ சட்டை விமர்சனம்!

சென்னை: செவ்வாய்க்கிழமை படம் பேய் படம் என போய் பார்த்தால் சரியான அடல்ட் ஒன்லி படமாக உள்ளதே என ப்ளூ சட்டை மாறனும் விமர்சித்துள்ளார்.

கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் என இரு படங்கள் வெளியாகின. இதில், ஜப்பான் படம் ரசிகர்களை கவரவில்லை. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஓரளவுக்கு ஓடி வருகிறது.

Blue Sattai Maran Mangalavaaram Review in Tamil

நடிகர் விஜய்யின் லியோ படத்தை மீண்டும் 100 தியேட்டர்களில் குறைவான டிக்கெட் விலைக்கு ரிலீஸ் செய்துள்ளனர். இந்த வாரம் தமிழ் படங்கள் பெரிதாக வெளியாகாத நிலையில், தெலுங்கு படமான மங்களவாரம் தமிழில் செவ்வாய்க்கிழமை எனும் டைட்டிலில் வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தை இங்கே காணலாம்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்த வாரம் தமிழில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், தெலுங்கு படமான மங்களவாரம் தமிழில் டப் செய்து வெளியாகி உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை படத்தை பார்த்து விமர்சனம் சொல்லியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் பயல் ராஜ்புத் நடித்த ஹாரர் த்ரில்லர் படமான இந்த படத்துக்கு ஏற்கனவே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளன.

அடல்ட் ஒன்லி: ஆரம்பத்தில் ஒவ்வொரு வாரமும் கள்ள காதலில் ஈடுபடுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில், நந்திதா அதனை கண்டுபிடிக்கும் தேடுதலில் ஈடுபடுகிறார். போலீஸ் அதிகாரியான அவர் அந்த கொலை மிஸ்டரியை கண்டுபிடித்தாரா/ அதற்கு காரணம் அமானுஷ்யமா? அல்லது சாதாரண சைக்கோவின் பழிவாங்கல் கதையா என்கிற ட்விஸ்ட்டுடன் இந்த படம் இருப்பதாக கூறியுள்ளார். படம் முழுக்கவே அடல்ட் ஒன்லி காட்சிகளும் வசனங்களும் நிறைந்திருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறீயுள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனம்: பொதுவாக ப்ளூ சட்டை மாறன் கமர்ஷியல் படங்களை கழுவி ஊற்றி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துள்ளார். இந்த வாரம் தமிழ் படங்களை பார்த்து கடுப்பான ரசிகர்கள் செவ்வாய்க்கிழமை பார்த்து என்ஜாய் பண்ணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X