Blue Sattai Maran: லியோவுக்கு காஷ்மீராவது போனாங்க.. ஜெயிலர் பக்கா உப்மாப்படம் - ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: லியோ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், ஜெயிலர் படம் பக்கா உப்மா படம் என ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

Blue Sattai Maran once again trolls Rajinikanths Jailer and supports Leo

லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என ரஜினிகாந்த் வாழ்த்துவதும், ரஜினிகாந்தின் "நான் பொல்லாதவன்", கழுகு பட ரெஃபரன்ஸை லியோவில் விஜய் வைத்து நடித்திருப்பதும் என நடிகர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் நட்புடன் இருந்து வரும் நிலையில், ரசிகர்கள் தற்போது பாக்ஸ் ஆபிஸ் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

லியோ ஜெயிலரின் வசூலை முந்துமா? முந்தாதா? என்கிற போட்டி ஒரு பக்கம் நிலவி வரும் நிலையில், லியோவின் வசூல் எல்லாம் போலியான வசூல் அறிக்கை என ரஜினி ரசிகர்கள் மறுத்து வருகின்றனர்.

Blue Sattai Maran once again trolls Rajinikanths Jailer and supports Leo

200 கோடி கிளப்: ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் என சன் பிக்சர்ஸ் சொல்லும் போது துள்ளிக் குதித்த ரஜினி ரசிகர்கள் லியோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ சொல்லும் போது உருட்டு என உருட்டி வருகின்றனர். ஜெயிலர் வசூலை வடை என்றும் வடை மெஷின் என கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன் லியோ படத்தின் வசூல் அறிவிப்பை கலாய்க்காமல் மீண்டும் ஜெயிலரையே ட்ரோல் செய்து வருகிறார். 2 நாட்களில் லியோ 200 கோடி வசூலை கடந்து விட்டதாக தகவல்கல் வெளியாகி உள்ளன. முதல் நாளிலேயே 148.5 கோடி வசூல் ஈட்டிய நிலையில், 2ம் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது.

Blue Sattai Maran once again trolls Rajinikanths Jailer and supports Leo

உப்மாப்படம்: லியோ படத்தை அஜித் ரசிகர்கள் கலாய்த்தால் கூட பரவாயில்லை. ஆனால், ஜெயிலர் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு ரஜினி ரசிகர்கள் கலாய்க்கிறாங்களே என விஜய் ரசிகர் ஒருவர் கிண்டல் செய்து போட்ட மீமை ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன், "லியோவுக்கு காஷ்மீராவது போனாங்க.. ஜெயிலர் பக்கா உப்மாப்படம்" என ட்வீட் போட்டு ரஜினி ரசிகர்களை மீண்டும் வம்பிழுத்துள்ளார்.

Blue Sattai Maran once again trolls Rajinikanths Jailer and supports Leo

ஜெயிலர் படம் பக்கா பான் இந்தியா படம் என்றும் ஒவ்வொரு ஊருக்கும் ரஜினி போனதை ப்ளூ சட்டை மாறன் பார்க்கலையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X