Blue Sattai DD Returns Review: வயிறு குலுங்க சிரிக்க வச்சிட்டாரு சந்தானம்.. ப்ளூ சட்டையே ஹேப்பி!

சென்னை: ப்ளூ சட்டை மாறனிடம் இந்த வாரம் யாரு சிக்கி சின்னா பின்னம் ஆகப் போவது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அத்தி பூத்தது போல அதிசயமாக ஃபுல் பாசிட்டிவ் ரிவ்யூவை சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு கொடுத்துள்ளார்.

பாதி பரவாயில்லை என ப்ளூ சட்டை சொன்னாலே அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வரும் நிலையில், முழு படமும் நல்லா இருக்குன்னு மாறன் விமர்சித்துள்ள நிலையில், சந்தானம் மட்டுமில்லை படக்குழுவே செம ஹேப்பியாகி இருக்கும் இந்நேரம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு கொடுத்த முழுமையான விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

Blue Sattai Maran praises Santhanams DD Returns in his review

ப்ளூ சட்டை மாறனே சிரிச்சிட்டாரு: காமெடி படங்கள் என்றாலும், கமர்ஷியல் படங்கள் என்றாலும், பேய் படங்கள் என்றாலும் வழக்கமான அதே அரைத்த மாவை தான் அரைத்துள்ளனர் என பொளந்துக் கட்டி வரும் ப்ளூ சட்டை மாறன் சந்தானத்தின் படமும் அப்படி படு மொக்கை படமாகத்தான் இருக்கும் என கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு போய் பார்த்தால், வயிறு குலுங்க சிரிக்க வச்சிட்டாரு சந்தானம் என டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பாராட்டுப் பத்திரமே வாசித்துள்ளார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்களில் காமெடி காட்சிகள் ரொம்பவே மிஸ்ஸிங் என குறை சொல்லிக் கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தில் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் காமெடி காட்சிகள் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கு என்றும் இயக்குநர் பிரேம் ஆனந்த் சந்தானம், மொட்டை ராஜேந்தர், ரெடின் கிங்ஸ்லி, மாறன், ஃபெப்ஸி விஜயன் என பலரையும் சரியாக பயன்படுத்தி உள்ளார் என விமர்சித்துள்ளார்.

காமெடி பேய் படம்னாலும் கதை இருக்கு: பேய்க்கு ஒரு கதை, சந்தானத்துக்கு ஒரு கதை, இன்னொரு வில்லன் கேங்குக்கு ஒரு கதை என தனித்தனியாக பல குட்டி கதைகள் இணைந்து அந்த பேய் பங்களாவில் பண்ணும் அலப்பறைகள் தான் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது என ப்ளூ சட்டை மாறன் சந்தானம் படத்துக்கு தம்ப்ஸ் அப் காட்டி உள்ளார்.

ப்ளூ சட்டை மாறனே இப்படி பாராட்டுறாருன்னு ரசிகர்கள் உடனடியாக இந்த வாரம் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை பார்த்து விட வேண்டியது தான் என டிக்கெட்டுகளை புக் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஆபாச வசனங்களோ, காட்சிகளோ இல்லை: குறிப்பாக குழந்தைகளுடன் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் காமெடி பேய் படங்களில் இடம்பெறும் டபுள் மீனிங் வசனங்கள் மற்றும் ஆபாச காட்சிகள் இல்லாமல் படம் நீட்டா இருப்பதால் எல்லோருமே தாராளமாக படத்தை பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X