Vijay: அரசியலுக்கு வராமலே.‌. அரசாங்கம் நடத்துறாரா விஜய்?.. ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்!

சென்னை: நடிகர் விஜய் 2026ம் தேர்தலுக்கு வரத் தகுதி இல்லை என்றும் அவர் மக்களுக்கான விஷயங்கள் எதையும் இன்னமும் பெரிதாக செய்யவில்லை. அதையெல்லாம் முதலில் செய்து விட்டு பின்னர் அரசியலுக்கு வரட்டும் என கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அரசியலுக்கு வராமலே அரசாங்கம் செய்யும் வேலைகளை செய்கிறாரா விஜய்? என ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

நடிகர் விஜய் இன்னமும் நேரடியாக அரசியலுக்கு வரப் போவதை அறிவிக்கவில்லை. ஆனால், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அரசியல் களத்தில் ஈடுபடுத்தி வருகிறார்.

Blue Sattai Maran praises Vijay for his library launch idea

ஆனால், கூடிய விரைவில் நேரடியாக நடிகர் விஜய்யே அரசியலுக்கு வரப் போவது உறுதி என்றே தெரிகிறது என்றும் லியோ படத்தின் வெற்றி விழாவில் ஹெவியாக அரசியல் வாடை அடித்தது என்றும் பலரும் குறிப்பிட்டு இருந்தனர்.

தளபதி 68க்கு பிறகு: லியோ படத்தை முடித்து விட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாக்‌ஷி சவுத்ரி நடிக்க உள்ள நிலையில், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல், யோகி பாபு மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அந்த படத்திற்கு பிறகு சினிமாவுக்கு சிறிது காலம் ரெஸ்ட் கொடுத்து விட்டு அரசியலில் முழு நேரமாக முட்டிப் பார்த்து விடலாம் என்கிற ஐடியாவில் தான் விஜய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் நூலகம்: இந்த ஆண்டு தொடக்கத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கினார் விஜய். இந்நிலையில், 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்க பயிலகம் போல நூலகத்தையும் திறக்க திட்டமிட்டுள்ளார். நாளை புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தாம்பரம் உள்ளிட்ட சில இடங்களில் நூலகம் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: ”அரசியலுக்கு வராமலே.‌. அரசாங்கம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை 234 தொகுதிகளிலும் செய்து வருகிறாரா விஜய்?” என அந்த செய்தியை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். அரசியலுக்கு வரத்தான் இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது விஜய் செய்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X