Blue Sattai Maran Premalu Review: டைட்டானிக் படத்தின் காப்பி.. ப்ளூ சட்டை மாறனின் பிரேமலு விமர்சனம்!
சென்னை: கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் இன்று தமிழ் டப்பிங்கில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. காதலர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெறும் 6 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 100 கோடி வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 21 கோடி பட்ஜெட்டில் உருவாகி 175 கோடி வசூலை ஈட்டியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை இந்த படங்கள் ஈட்டிக் கொடுத்துள்ளன.

தமிழில் வெளியாகி உள்ள பிரேமலு படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அந்த படத்திற்கு கொடுத்துள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
பிரேமலு ரிலீஸ்: கிரிஷ் ஏடி இயக்கத்தில் இளைஞர்களின் இன்றைய காதல் கதையை செம காமெடியாக கொண்டு சென்றுள்ள படம் தான் பிரேமலு. நஸ்லென் மற்றும் மமிதா பைஜு இந்த படத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், ரசிகர்களை படம் ரொம்பவே கனெக்ட் செய்து விட்டது. அதன் காரணமாகத்தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை பிரேமலு பெற்றுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: பிரேமலு தமிழ் டப்பிங் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்தின் ப்ரீமியர் நேற்று வெளியான நிலையில், அதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அதிகாலையிலேயே பிரேமலு தமிழ் படத்திற்கு விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
டைட்டானிக் கதை: பிரேமலு படத்தின் கதை என்னவென்றால் ஏணி வைத்தாலும் கிடைக்காத ஹீரோயினை ஹீரோ எப்படி கரெக்ட் செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. டைட்டானிக் உள்ளிட்ட உலகளவில் வெளியான பல காதல் படங்களின் ஒன்லைன் தான் என்றாலும், படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதையை சுவாரஸ்யமாக யூகிக்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
குபீர் சிரிப்பு: காமெடி நடிகர்கள் நடிக்கும் படங்களிலேயே நகைச்சுவை காட்சிகளில் சிரிப்பு வரவில்லை என கிண்டல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனையே இந்த பிரேமலு படம் பல இடங்களில் குபீரென சிரிக்க வைத்து விட்டதாக படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இன்று தமிழில் வெளியாகி உள்ள அமிகோ காராஜ் மற்றும் சமுத்திரகனியின் யாவரும் வல்லவரே படங்களுக்கு இந்த படம் செம டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











