சிகரம் தொட்ட சின்னத்திரை நாயகன்.. சிவகார்த்திகேயனுக்காக திடீர் புரமோஷனில் இறங்கிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: "சிகரம் தொட்ட சின்னத்திரை நாயகன்" என நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி புத்தகமே வெளியிட்டுள்ளனர் என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் காலையிலேயே ட்வீட் போட்டுள்ளார். இது உண்மையா? அல்லது இவரே வேண்டுமென எடிட் செய்து சிவகார்த்திகேயனை கலாய்க்கிறாரா என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்ப அதற்கு பக்காவான பதிலையும் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு பல நடிகர்கள் வந்திருக்கின்றனர். துணை நடிகர்களாக மட்டுமின்றி டாப் ஹீரோக்களாக மாறி வருவதை ரசிகர்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு, கவின் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

Blue Sattai Maran promotes Sivakarthikeyan book in social media

சின்சியராக சினிமாவில் உழைத்தால் நிச்சயம் மிகப்பெரிய சாதனையை அடையளாம் என்பதற்கு சமகால எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு பஸ் கண்டக்டர் எப்படி தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக தனது உழைப்பால் முன்னேறினாரோ அதே போல சிவகார்த்திகேயனும் படத்துக்கு படம் தன்னை மெருகேற்றிக் கொண்டு இப்படியொரு இமாலய வளர்ச்சியை அடைந்திருக்கிறார்.

டாம் க்ரூஸ்க்கே வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார் என்றும் சிவகார்த்திகேயன் பயோபிக்கில் ரஜினிகாந்த் நடிக்க சரியான ஆள் என்றும் கடந்த சில நாட்களாக போட்டோ எடிட் எல்லாம் செய்து ஏகப்பட்ட ட்ரோல்கள் சிவகார்த்திகேயனை சுற்றி உலா வருகின்றன. இந்நிலையில், அதற்கும் ஒருபடி மேலே சென்று மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், டாம் க்ரூஸை அழைத்து சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார் என போட்டோ எடிட் போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர்.

சிகரம் தொட்ட சிவகார்த்திகேயன்: "சிகரம் தொட்ட சிவகார்த்திகேயன்.எழுதியவர்: வசந்த் பாரதி, சத்யா பதிப்பகம். நூலின் விலை 110 ரூபாய். ஆன்லைனில் வாங்க: அமேசான் வெப்சைட்." என சிவகார்த்திகேயன் புத்தகத்தை வேறலெவலில் காலையிலேயே புரமோட் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சிஎஸ்கே என சிவகார்த்திகேயனை கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன் திடீரென இப்படி மாறிவிட்டாரே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வர அமேசான் லிங்கையும் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் புத்தகத்தை அதிரடியாக அமேசான் பிரைமில் அவரது ரசிகர்கள் ஆர்டர் போட ஆரம்பித்து விட்டனர்.

துப்பாக்கியை கொடுத்துடுறேன்: சமீபத்தில் நடைபெற்ற சரிகமப இறுதிச்சுற்றில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயனிடம் 6 வயதான க்யூட்டான வாலு பையன் புவனேஷ் "தளபதி விஜய் சார் கொடுத்த துப்பாக்கியை எனக்கு கொடுக்கிறீங்களா எனக் கேட்க, அதுக்கு என்னப்பா கொடுத்துவிடுகிறேன். ஆனால், நீயே துப்பாக்கி சைஸ்ல தானே இருக்க என பேசியதும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Take a Poll

விஜய்யுடன் மோத ரெடியாகிட்டாரு: கோட் படத்தில் கேமியோவாக நடித்த சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் வெங்கட் பிரபுவுக்கு எஸ்கே ஓகே சொல்லவில்லை என்கின்றனர். அதே சமயம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி மதராஸி படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் தனது பராசக்தி படத்தை மோத விடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X