Vettaiyan: விஜய் படத்தின் போஸ்டரைக் காப்பியடித்த சூப்பர் ஸ்டார்.. ப்ளூ சட்டை மாறன் ரிசர்ச்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் கடைசியாக தயாரித்த சில படங்கள் வசூலில் சொதப்பியதால், லைகா நிறுவனத்திற்கு தற்போது பெரும் நம்பிக்கை கொடுக்கும் படங்களாக வேட்டையன் மற்றும் விடாமுயற்சி உள்ளது. இதில் வேட்டையன் படம் முதலில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படியான நிலையில், வேட்டையன் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் நாளை அதாவது செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்காக படக்குழு வெளியிட்ட போஸ்டர் நடிகர் விஜய் படத்தின் போஸ்டரைப் போல் உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் ஜெய்லர். அந்தப் படத்திற்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் கமிட் ஆன படம் வேட்டையன். இதற்கிடையில் லால் சலாம் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடித்துள்ள படமான வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. வேட்டையன் படம் ரிலீஸ் ஆகவுள்ளதால், அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரத்தில் படத்தில் தனது டாப்பிங் பணிகளை முடித்தார். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திப்போவதாக சூர்யா அறிவித்தார்.

படக்குழு: படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கூலி: இதுமட்டும் இல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகின்றார். கூலி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெயர் தேவா என படக்குழுவே அறிவித்தது. படத்தின் ட்ரைலர் அடுத்த சில வாரங்களில் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் மனசிலாயோ பாடல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட போஸ்டர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் போஸ்டரைப் போல் உள்ளது என விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கத்தி படத்தின் போஸ்டர் மற்றும் மனசிலாயோ அறிவிப்பு போஸ்டர் என இரண்டையும் பகிர்ந்து, " எந்தா சாரே.. கத்தி போஸ்டரை.." என பதிவிட்டுள்ளார். இது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் மனசிலாயோ பாடலை ஏ.ஐ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி அதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.,யின் குரலில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











