சத்யராஜ், சூர்யா , விஷால், வெற்றிமாறன் உள்ளிட்ட பல புரட்சிப்புலிகள் எங்கே? ப்ளூ சட்டை மாறன் கேள்வி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவரை வளாகத்தின் வெளியில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் உள்ளே நுழைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை மாநகரக் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. காவல்துறையின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லையென பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இப்படியான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக, திரைத்துறையினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அமைதியாக இருப்பது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை பாராட்டியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் அவரது பதிவில் ஒருமையில் திரைத்துறையினரைக் குறிப்பிட்டது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

blue sattai maran suriya

கார்த்திக் சுப்பராஜ்: ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில், " இதற்கு முன்பு மக்களுக்காக.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு திரையுலகினர் குரல் தந்தனர். தற்போது அனைவரும் சைலன்ட் மோடில். விஜய் அரசியல் கட்சித்தலைவர் என்பதால் கண்டனம். தெரிவித்தார். தெரிவித்துதான் ஆக வேண்டும். அரசியல் சார்பற்று.. குரல் தந்துள்ள ஒரே திரையுலக ஆண்மகன்.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மட்டுமே. சத்யராஜ், சூர்யா , விஷால், வெற்றிமாறன் உள்ளிட்ட பல புரட்சிப்புலிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ரஜினி, கமல் மௌனம் காப்பது ஏனென்று ஊருக்கே தெரியும். ஊதவே வேண்டாம்.

சிவகார்திகேயன்: ஒரே ஒரு படம் ஓடினாலும் ஓடியது. இந்த திடீர் தளபதி டெய்லி குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கான். செஸ் வீரருக்கு வாட்ச் பரிசு, நல்லக்கண்ணு ஐயாவை சந்திப்பது என இந்தக்கொசு திடீரென டேக் ஆஃப் ஆகியிருக்கு. ஆனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இவன் எந்த ஆதரவும் தெரிவிக்கல. இவங்கள்ல பலருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறது. அதை மனசுல வச்சாவது குரல் தர வேண்டாமா? மொத்த திரையுலகத்துலயும் ஒரே ஒரு மானஸ்தர்... அது கார்த்திக் சுப்பராஜ் மட்டும்தான் போல. மத்த ஸ்டார்கள் எல்லாம் படத்துல மட்டும்தான் பெண்களை காப்பாத்துவாங்க" என ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா: அதேபோல் மற்றொரு பதிவில், "பொள்ளாச்சில பெண்களுக்கு எதிரா தவறு நடந்ததை படமாக்கி... அதுல வீரவசனம் பேசி ஆக்சன்ல அதிரடி கெளப்புனான்.. எதற்கும் துணிந்தவன். இப்ப சத்தத்தையே காணும்..." எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு இணைவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X