Viduthalai 2: விடுதலை 2வில் அட்டாக் செய்யப்படுவது MGRஆ? வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன் கேள்விகள்!
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் விடுதலை பாகம் 2. இந்தப் படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன விடுதலை படத்தின் அடுத்த பாகம். இந்தப் படத்தின் மூலம் சூரி கதாநாயகனாக அறிமுகமானார். படம் மாபெரும் வெற்றியைக் குவித்தது. படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இதுமட்டும் இல்லாமல், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் வெற்றி மாறனுக்கு படம் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அவை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

விடுதலை 2. - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 1:
கதை நடக்கும் காலகட்டம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் என தெரிகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை வேறு வடிவில் எடுத்துள்ளாராம் வெற்றிமாறன். இதில் விஜயசேதுபதிக்கு பெருமாள் எனும் 'பிரபாகரன்' கேரக்டர். என்னை மாதிரி ஒருத்தன் தண்டவாளத்துல தலை வச்சி படுத்ததாலதான் உன்னை மாதிரி ஒருத்தன் படிச்சிட்டு வந்து இங்க உக்காந்து இருக்க என ட்ரைலரில் இளவரசு பேசும் வசனம் யாரை குறிக்கிறது என்பது ஊருக்கே தெரியும். ஆனால் தமிழகத்தில் பல்லாயிரம் ஆரம்ப, உயர்நிலை பள்ளிகளை திறந்து, மதிய உணவிட்டு, லட்சக்கணக்கான முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியவர் காமராஜர் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ இயலாது. இதை உங்கள் படத்தில் பதிவு செய்துள்ளீர்களா சார்?

விடுதலை 2. - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 2:
கதை நடக்கும் காலகட்டம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் என தெரிகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை வேறு வடிவில் எடுத்துள்ளாராம் வெற்றிமாறன். இதில் விஜயசேதுபதிக்கு பெருமாள் எனும் 'பிரபாகரன்' கேரக்டர். தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மற்றுமே உருவாக்க முடியும். அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது எனும் வசனம் வருகிறது. இது விஜய்யை குறிப்பதாக கூறினர். ஆனால் உண்மை அதுவல்ல. அவரிடம் பல முரணான கொள்கை தத்துவங்கள் உள்ளன. இந்த வசனம் எம்..ஜி.ஆரை கிண்டல் செய்கிறது. நமக்கு ஒரே கேள்விதான். உயர்வான தத்துவங்களை கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் தலைவர்கள் உயர்ந்தவர்களா அல்லது தத்துவம் இல்லாவிட்டாலும்.. சொந்த உழைப்பில் சம்பாதித்த தனது சொத்துக்களை பிறருக்கு தானம் செய்தவர் உயர்ந்த தலைவரா? உங்கள் ஹீரோ பெருமாள்.. தன் மக்கள் விடுதலைக்கு போராடியபோது.. உதவிக்கரம் நீட்டியது எம்.ஜி.ஆர் என்பதை படத்தில் பதிவு செய்துள்ளீர்களா அல்லது மறைத்து விட்டீர்களா?

விடுதலை 2 - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 3:
தத்துவம் இல்லாத தலைவர் என நையாண்டி செய்வோருக்கு தனது இதயவீணை படத்தின் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் பாடல் மூலம் அன்றே பதிலடி தந்த எம்.ஜி.ஆர்.

வரிகள்:
சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா. சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா. பல அரிய கொள்கை, தத்துவங்களை வைத்துக்கொண்டு.. நல்லது செய்யாமல் இருப்பதை விட.. போலி தத்துவம் இல்லாமல் மக்கள் தொண்டாற்றும் தலைவரே மேல் என மக்கள் முடிவு செய்ததால்தான்.. வெற்றிகளை மட்டுமே பெற்ற ஒரே அரசியல் தலைவராக இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

விடுதலை 2 - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 4:
சமத்துவம் எனும் எளிய தத்துவம் கொண்ட எம்.ஜி.ஆர்.. தனது உயிலில் எழுதி வைத்தது தன் பரம்பரை சொத்தையோ அல்லது மக்களிடம் லவட்டிய பணத்தையோ அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உழைத்து சம்பாதித்தது. விவரங்கள்:
* தனது சொத்துக்களின் பெரும் பகுதியை மக்களுக்கு பயன்படும்படி எழுதி வைத்தார்.
* சிறிய பகுதியை மட்டுமே தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கினார்.
* பல சொத்துக்கள் கட்சிக்காக மாற்றி எழுதப்பட்டு விட்டன.
* ராமாவரம் வீடு, ராயப்பேட்டை கட்சி ஆபீஸ், தி.நகர் வீடு (எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்), அடையாறு சத்யா ஸ்டுடியோ, கோடம்பாக்கத்தில் தற்போது செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர் பள்ளிகள்..
* .. வட பழனி ஜே.ஆர்கே. பள்ளி, விருகம்பாக்கம், செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கான பள்ளி, சாலிகிராமத்தில் உள்ள தோட்டம் என அவரது சொத்துக்கள் அனைத்தும் மக்கள் பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ளன.
* எந்த சொத்தையும் எம்ஜிஆர் - ஜானகி உறவினர்கள், வாரிசுகள் விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது. அவர்கள் வசிக்கக் கொடுத்துள்ளது ராமாவரம் தோட்டத்தில் உள்ள ஒரு பகுதி மட்டுமே.

வாழ்த்து: ஆகவே.. பல பொக்கிஷ தத்துவங்களை வைத்துக்கொண்டு தன்னலம் மிக்க தலைவராய் இருப்பதை விட... தத்துவமே இல்லாமல் போனாலும் .. இப்படியான தன்னலமற்ற தலைவர்கள் இருப்பதுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சார்புத்தன்மைக்கு சோரம் போயிருந்தாலும்.. விடுதலை 2 வெற்றிபெற வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள். என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவுக்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











