சீனு ராமசாமியின் பாலியல் தொல்லை?.. மன்சூர் அலிகானுக்கு மட்டும் தண்டனையா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி
சென்னை: Seenu Ramasamy (சீனு ராமசாமி) சீனு ராமசாமி மீது பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கும் சூழலில் ப்ளூ சட்டை மாறன் அதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை காலங்காலமாக இருந்துவருகிறது. அதனாலேயே சினிமா என்றாலே மோசம் என்று நினைப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கு ஏற்ப இந்தக் காலத்திலும் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பாலியல் தொல்லையும், அவர்களை ஆபாசமாக பேசுவதும் நடப்பது வேதனைக்குரிய விஷயம்தான். பிக்பாஸ் விசித்திராவும் 2001ஆம் ஆண்டு தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்திருந்தார்.

மன்சூர் அலிகான்: சமீபத்தில்கூட நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவை ஆபாசமான முறையில் பேசினார். அவரது பேச்சுக்கு திரையுலகத்திலிருந்து கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றுகூட அவர் அதற்காக காவல் நிலையத்துக்கு சென்றார். ஆனால் தான் பேசியது தவறு என்று அவர் வாய் திறந்து மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.
பிஸ்மி குற்றச்சாட்டு: நிலைமை இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் சீனு ராமசாமி குறித்து பேசியிருக்கும் விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் நடிகை மனிஷா யாதவ் நடித்தார்.
பாலியல் தொல்லை: அந்தப் படத்தில் நடித்தபோது சீனு ராமசாமி மனிஷா யாதவுக்கு எவ்வளவு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது எனக்கு தெரியும். மனிஷாவே எனக்கு ஃபோன் செய்து அதனை தெரிவித்தார். அதுதொடர்பான ஆதாரங்களும், மனிஷாவின் வாக்குமூலமும் என்னிடம் இருக்கிறது. நல்ல இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் சீனு ராமசாமியின் இன்னொரு முகம் இதுதான்" என குறிப்பிட்டார்.
புது புயல்: பிஸ்மியின் இந்தக் குற்றச்சாட்டு இண்டஸ்ட்ரியில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. ஏனெனில் சீனு ராமசாமி மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து படங்கள் எடுக்கக்கூடியவர். அவரா ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லையை கொடுத்திருக்கிறார். அதை நம்பவே முடியவில்லை என அதிர்ச்சி விலகாமல் கூறுகின்றனர். மேலும் இதற்கு சீனு ராமசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது ட்விட்டர் பக்கத்தில் பிஸ்மி பேசிய வீடியோவை பகிர்ந்து, வணக்கம் சீனு ராமசாமி அவர்களே. இதற்கு உங்கள் பதில்? மன்சூர் அலிகானுக்கு மட்டும்தான் தண்டனையா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











