அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய படங்களை பார்த்துவிட்டு பல யூடியூப் சேனல்கள் மற்றும் மீடியாக்கள் விமர்சனங்களை செய்து வருகின்றன. இதில் தமிழ் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனல் மூலம் தனது விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்.

விமர்சகர் இட்டிஸ் பிரசாந்த் சினிமா பிரபலங்களை பாராட்டி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அபிஷேக் ராஜாவும் அப்படித்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே போய்விட்டு வந்து தனது பட வேலைகளை பார்த்து வருகிறார்.

Blue Sattai Maran reacted to Bismi s latest video on him

ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை அதிகம் கொடுத்து தங்கள் படங்களை காலி செய்து வருகிறார் என தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில், விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு காரணமாக வெடித்துள்ள சர்ச்சையை விவரித்துப் பேசும் நோக்கத்தில் பிஸ்மி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிரபலங்களுடன் பிரச்சனை: ப்ளூ சட்டை மாறன் சினிமா விமர்சனத்தை தாண்டி தனிப்பட்ட முறையில் பல பிரபலங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பேசியுள்ளார். பார்த்திபன், ஆர்.ஜே. பாலாஜி, லேட்டஸ்ட்டாக விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல பிரபலங்கள் ப்ளூ சட்டை மாறனுடன் நேரடியாக சண்டை போட்டு உள்ளனர். சிவகார்த்திகேயன், அஜித், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து அட்டாக் செய்யும் விதமாக பல ட்வீட்களையும் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

அறிவு ஜீவியா? அரைவேக்காடா?: சமீபத்தில் ரோமியோ படம் ஓடாததற்கு காரணமே ப்ளூ சட்டை மாறன் போட்ட விமர்சனம் தான் என்பது போல விஜய் ஆண்டனி பதிவுகளை போட்ட நிலையில், விஜய் ஆண்டனிக்கு நடிக்கவே தெரியாது என பதிலுக்கு ரவுண்டு கட்டி விட்டார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில், இதுதொடர்பாக ப்ளூ சட்டை மாறன் அறிவு ஜீவியா? அரைவேக்காடா? என ஒரு வீடியோவையே வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறனுக்கு பாராட்டு: நல்ல படங்களை எடுத்தால் எந்த ப்ளூ சட்டை மாறன் என்ன கதறுனாலும் படங்கள் ஓடத்தான் செய்யும். நீங்க சுமாரா படம் எடுத்துட்டு ஒரு நல்ல விமர்சகரை இப்படி தப்பா பேசுவது சரியில்லை என ப்ளூ சட்டை மாறனை அந்த வீடியோவில் பிஸ்மி புகழ்ந்து தள்ளி விட்டார்.

ப்ளூ சட்டை மாறன் ரியாக்‌ஷன்: பிஸ்மியின் வீடியோவை பார்த்த ப்ளு சட்டை மாறன் இதையே நம்ம விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்வோம் என நினைத்து, "ப்ளூசட்டை அறிவு ஜீவியா? அரைவேக்காடா? பிஸ்மி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்." என கேப்ஷன் கொடுத்து அந்த வீடியோவை சைலண்டாக ஷேர் செய்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்துக் கொண்டு விஜய் ஆண்டனியை மறைமுகமாக நல்லா வெறுப்பேத்துறாங்கப்பா என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Blue Sattai Maran reacted to Bismi s latest video on him

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X