Blue Sattai Maran Video - ரஜினியுடன் சீக்ரெட் சந்திப்பு.. வீடியோ வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran Video (ப்ளூ சட்டை மாறன் வீடியோ) ரஜினியுடனான சீக்ரெட் சந்திப்பு தொடர்பான வீடியோவை வெளியிடுவேன் என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் தனியாக யூட்யூப் சேனல் ஆரம்பித்து அதில் திரைப்பட விமர்சனங்களை பதிவிட்டுவருகிறார். அவரது விமர்சனத்துக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அதேசமயம் விமர்சனத்தில் எல்லை மீறி செல்கிறார்; உருவ கேலி வேறு செய்கிறார் என்று பலர் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். மேலும் எல்லோரின் படங்களையும் சகட்டுமேனிக்கு விளாசுகிறாரே இவர் ஒரு படம் எடுத்தால் என்ன என்றும் ரசிகர்கள் கேள்விகள் எழுப்பினர்.

ஆண்டி இந்தியன்: அதனையடுத்து ஆண்ட்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சிறப்பு காட்சியையும் போட்டு காண்பித்தார். ரிலீஸானதும் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். இப்படி படம் எடுக்கும் ஒருவர்தான் மற்ற படங்களை விமர்சிக்கிறாரா என ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
ரஜினியை பங்கம் செய்யும் ப்ளூ சட்டை: ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக ட்விட்டரில் தாக்கிவருகிறார். அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்த அவர் அந்தப் படம் வசூலித்ததாக வரும் அத்தனையும் பொய்தான்; ரஜினியின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் வடை சுடுகிறார்கள் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.
சீக்ரெட் மீட்டிங்: சூழல் இப்படி இருக்க இன்று காலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்பு சீக்ரெட்டாக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விமர்சகர்களை சந்தித்ததாகவும். அதில் தானும் சென்றிருந்ததாகவும் அப்போது சில கசப்பான நிகழ்வுகள் நடந்ததாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அப்போது தன்னால் எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
ம்ம்க்கும் இதுதானாக்கும்: அவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன மாதிரியான வீடியோவாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் சொன்னதுபோல் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருக்கிறார். வடிவேலு காமெடி சீனை எடுத்து போட்டு அதில் வடிவேலுதான் ரஜினி என்றும், வெண்ணிற ஆடை மூர்த்திதான் ப்ளூ சட்டை மாறன் என்றும், மற்றொரு கதாபாத்திரம் செய்யாறு பாலு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, மற்றவர்களின் பில்லை (வசூல்) ஜெயிலர் கணக்கில் ரஜினிகாந்த் எழுதிக்கொள்கிறார் என்றும் அந்த வீடியோ மீம் மூலம் ரஜினி, அவரது ரசிகர்கள், ஆதரவாளர்களை கலாய்த்திருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்காகத்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தீர்களா என்றும் கேள்வி எழுப்பி; ரஜினியை நீங்கள் எவ்வளவு கலாய்த்தாலும் ஜெயிலர் வசூலை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











