ஆழம் தெரியாமல் காலை விட்ட அட்லீ.. அடேங்கப்பா இத்தனை கோடி நஷ்டமா?.. ப்ளூ சட்டை மாறன் சாடல்!

சென்னை: நயன்தாராவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அட்லீக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென கொட்டியது. ஷாருக்கான் உடன் அவர் இணைந்து உருவாக்கிய ஜவான் திரைப்படம் 1100 கோடி வசூல் செய்த நிலையில், அட்லீ படமாகவே பேபி ஜான் படத்தையும் புரமோட் செய்து லாபம் பார்க்க நினைத்து கடைசியில் பாலிவுட் புதைகுழியில் விழுந்து பல கோடிகளை பரிதாபமாக இழந்துள்ளார் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.

வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் கேமியோவாக சல்மான் கான் எல்லாம் நடித்த பேபி ஜான் திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியானது.

atlee blue sattai maran baby john


தெறி படத்தின் இந்தி ரீமேக்கையே பாலிவுட் ரசிகர்கள் அதிகம் பார்த்துவிட்ட நிலையில், அந்த படத்தின் காப்பி என ட்ரோல் செய்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த படம் ஒரு ரீமேக் படம் என்பது கூட தெரியாத அளவுக்கு தயாரிப்பு நிறுவனத்தின் தப்பான புரமோஷன் காரணமாக மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.

atlee blue sattai maran baby john


ஆழம் தெரியாமல் காலை விட்ட அட்லீ: இயக்குநராக அட்லீ தொட்டதெல்லாம் வெற்றி தான். ஆனால், தயாரிப்பாளராக மாற அவருக்கு ராசியில்லை என்பதை பேபி ஜான் படம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது. வருண் தவானையும் கீர்த்தி சுரேஷையும் நம்பி சுமார் 160 கோடி பட்ஜெட்டில் பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 35 கோடி வசூல் தான் இதுவரை இந்தியளவில் வந்துள்ளதாக கூறுகின்றனர். ஓவர் மசாலாவாக தெறி இந்தி ரீமேக்கை இயக்குநர் காலீஸ் இயக்கியது தான் பெரிய பிரச்சனை என்றும் அட்லீ தனது உதவி இயக்குநரை நம்பி ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் கலாய்: ”அட்லீ தயாரிப்பில் வருண் தாவன், கீர்த்தி சுரேஷ் நடித்த Baby John ஹிந்திப்படம் டிசம்பர் 25 அன்று வெளியானது. இது தெறி படத்தின் ரீமேக் ஆகும். 160 கோடியில் எடுக்கப்பட்டு.. 50 கோடி கூட வசூலாகாமல் படுதோல்வி‌அடைந்தது. பட ப்ரமோஷன் பேட்டியில் 'என்னிடம் பணம் தந்தால் அதை மூன்று மடங்கு லாபமாக திருப்பித்தருவேன்' என கெத்தாக கூறினார் அட்லீ. ஆனால் போட்ட பணத்தில் பாதியைக்கூட எடுக்காமல் போனது பேபி ஜான்.” என ப்ளூ சட்டை மாறன் அட்லீக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

சல்மான் கான் படம் சங்கு தான்: பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை தவிர அமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வரிசையாக ஃபிளாப் ஆகி வருகின்றன. அட்லீ அடுத்து சல்மான் கான் மற்றும் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கினாலும் அவருக்கு சங்கு தான் என இப்பவே பாலிவுட் ரசிகர்கள் ஜோசியம் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அட்லீ இயக்காத நிலையில் தான் பேபி ஜான் ஃபிளாப் ஆனது என்றும் கண்டிப்பாக அட்லீ படம் தோல்வியை தழுவாது என்றும் கூறுகின்றனர். ஆனால், பாலிவுட்டில் வசூல் வேட்டை நடத்த வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப ஹீரோவும் வெயிட்டாக இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X