என்னடா இது விஜய்யோட குட்டி ஸ்டோரிக்கு வந்த சோதனை.. 5 வருசத்துக்கு முன்ன ப்ளூ சட்டை சொன்ன கதையாம்!
சென்னை: லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ஐந்து வருடங்களுக்கு முன்பாக ப்ளூ சட்டை மாறன் சொன்ன குட்டி ஸ்டோரி என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டு நடிகர் விஜய்யை ட்ரோல் செய்துள்ளார்.
லியோ படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே நடிகர் விஜய்யை தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் கதையவே ஆட்டையை போட்டு விஜய்க்கு எழுதி கொடுத்த புண்ணியவான் யாருடா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

லியோ வெற்றி விழா: நடிகர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி, மடோனா செபாஸ்டியன், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியன், இயல் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரியை லியோ வெற்றி விழாவில் பேசியிருந்தார்.
குட்டி ஸ்டோரி: "ஒரு காட்டுல சிங்கம், புலி, யானை, மான், காக்கா , கழுகு" என சொன்ன உடனே விஜய் சிரிக்க மொத்த நேரு ஸ்டேடியமும் சிரிக்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் கேப் விட்டு மீண்டும் குட்டி ஸ்டோரிக்குள் சென்ற விஜய் காட்டுக்கு வேட்டைக்கு ரெண்டு பேர் போனாங்க.. ஒருத்தர் வில் அம்போட போய் முயலை வேட்டையாடிட்டு வந்தாரு.. இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்றும் இல்லாமல் வந்தார். இதில் வெற்றியாளர் யாரு, கண்டிப்பா யானைக்கு குறி வச்சவர் தான்.. பெருசா கனவு காணுங்க என குட்டி ஸ்டோரி சொல்லியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் சொன்ன கதை: 5 வருடத்துக்கு முன்பே இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்கு விமர்சனம் சொல்லும் போது ப்ளூ சட்டை மாறன் சொன்ன குட்டி ஸ்டோரியைத் தான் நடிகர் விஜய் நேற்று மேடையில் பேசியுள்ளார் என ஆதாரத்துடன் ப்ளூ சட்டை வெளியிட்டு விஜய்யை கலாய்த்துள்ளார்.
பழைய கதை: குட்டி ஸ்டோரியாக சொல்லப் படுவதே பழைய கதைகளை தான். இதை யார் வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் சொல்லலாம். அதன் நோக்கத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும். தென்கச்சி கோ ஸ்வாமிநாதன் சொன்ன பல கதைகளை பல பிரபலங்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொல்லி வருகின்றனர் என விஜய் ரசிகர்கள் இது நீயே க்ரியேட் பண்ண சொந்த கதையா? என ப்ளூ சட்டை மாறனிடம் கேள்வி எழுப்பி சண்டைக்கு சென்றுள்ளனர். சோஷியல் மீடியாவில் விஜய்யின் பேச்சை கேட்டு விஜய் ரசிகர்களே சாந்தமாக மாற நினைத்தாலும் இவர் விட மாட்டார் போல தெரிகிறது.


Click it and Unblock the Notifications











