ஊமைகுத்தா குத்தி இருக்காங்க.. இங்க நான் தான் கிங்கு படத்தை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இங்க நான் தான் கிங்கு. இப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
கடந்த ஆண்டு சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெற்றி படமாக மாறியது. ஆனால் அதன் பின் வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் சரியாக ஓடவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில், சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் வசூல் ரீதியாக போட்ட பணத்தை திருப்பி கொடுத்து விட்டாலும், வசூல் ரீதியாக பெரிய அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.

இங்கு நான் தான் கிங்: இந்நிலையில், சந்தானம் நடிப்பில் நேற்று 'இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கான ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். இந்த படத்தின் ஹீரோவிற்கு கல்யாண வயசைத் தாண்டியும் கல்யாணம் ஆகவில்லை. பெண் பார்க்க போகிற எல்லா இடத்திலும் மாப்பிள்ளைக்கு சொந்தமா வீடு இருக்கா என்று கேட்டதால், 20 லட்சத்தை கடனாக வாங்கி வீடு வாங்கி விடுகிறார் சந்தானம்.
படத்தின் கதை: வீடு வாங்கிய பின் ஜமீன் வீட்டில் இருந்து ஒரு வரன் வர, அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று திட்டம் போடுகிறார். ஆனால், திருமணத்திற்கு பிறகு தான், ஜமீன் குடும்பம் ஒரு திவாலான குடும்பம் என்று தெரியவர, மனைவியை மட்டுமில்லாமல், மொத்த குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஹீரோவின் தலையில் விழுகிறது. கதை இப்படி சென்று கொண்டு இருக்க, ஒரு தீவிரவாதி கதை வருகிறது. அதில், தீவிரவாதிக்கும் ஹீரோவிற்கும் என்ன தொடர்பு என்பது தான் இங்கு நான் தான் கிங் திரைப்படத்தின் கதை.
படத்தின் மைனஸ்: இந்த படத்தின் மைனஸ் என்னவென்றால், இந்த படம் நல்ல நகைச்சுவை படம் தான் என்றாலும், திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார்கள். கதையை முதலில் ஹீரோவிற்கு கல்யாணம் ஆகவில்லை என்று ஆரம்பித்து, பின் தீவிரவாதியை கதையில் சேர்த்ததால் கதை எதை நோக்கி போகுதுனே தெரியல. குறிப்பான ஒரு படம் ஆரம்பித்து 20 நிமிஷத்தில் கதை எதை நோக்கி பயணம் செய்கிறது என்பதை சொல்லிவிட வேண்டும். ஆனால், இந்த படத்தில் கதை எதை நோக்கி நகர்கிறது என்று, இடைவேளை வரை தெரியவில்லை. இதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
ஊமைக்குத்து: சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி படம் போன்று இல்லை என்றாலும், கிக், 80ஸ் பில்டப் போன்ற படங்களைப் போல காட்டுமொக்கையாக இல்லாமல், ஓரளவிற்கு சுமாராக இருக்கிறது. வழக்கமாக தமிழ் சினிமாவில் நம்மை தியேட்டருக்குள் உக்காரவைத்து ஊமைக்குத்தா குத்துவாங்க, அப்படித்தான் இந்த படத்துலையும் நம்மை ஊமைக்குத்தா குத்தி இருக்காங்க என்று ப்ளூ சட்டை மாறன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











