களத்தூர் கண்ணம்மா காப்பி.. ஆனாலும், கவின் ’டாடா’ படத்தை கழுவி ஊற்றாத ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: வாய்ப்பு கிடைத்து, நடிகர்கள் கால்ஷீட் வாங்கி, வெயில், மழை, புயல் என ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்து புதுமுக இயக்குநர்கள் படம் எடுத்தாலும், ரிலீஸ் செய்ய முடியாமல் பல படங்கள் இன்னமும் கிடப்பில் கிடக்கின்றன. பைனான்ஸ் பிரச்சனைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக வெள்ளிக்கிழமை 3, 4 படங்களுடன் போட்டியாக வெளியாகும் படங்கள் கடைசியாக ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்களிடம் மாட்டி சிக்கித் தவிக்கின்றன.

இந்நிலையில், இந்த வாரம் கவின் நடிப்பில் வெளியாகி உள்ள டாடா திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களை துவைத்து எடுத்த ப்ளூ சட்டை மாறன் கவின் படத்தை களத்தூர் கண்ணம்மா காப்பி என்று சொன்னாலும், தனது விமர்சனத்தில் செம ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

கவினின் டாடா

கவினின் டாடா

ஜாலியாக எந்தவொரு கவலையும் இல்லாமல் கல்லூரி மாணவராக டாடா படத்தில் கவின் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பே காதலிக்கும் அபர்ணா தாஸை அம்மாவாக்கி விடுகிறார். அதன் பிறகு கருவை கலைக்க சொல்ல, அபர்ணா முடியாது என குழந்தையை பெற்றெடுத்து விட்டு கவினின் தலையில் கட்ட, பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக கவின் எப்படி மாறுகிறார் என்பது தான் டாடா படத்தின் கதை. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து இன்றைய இளைஞர்களின் கண்ணாடியாக காட்சியளிக்கிறார் கவின்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

கரணம் தப்பினால் மரணம் என்கிற கதையை எடுத்துக் கொண்டு கவின் மணிகண்டனாகவே வாழ்ந்திருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் டாடா படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். அடுத்த சீன் என்ன வரும் என கெஸ் பண்ண முடிந்தாலும், அதில், சின்ன சின்ன காமெடிகளையும், புதிய காட்சிகளையும் வைத்து படத்தை ரசிக்கும் படி இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கி அசத்தி உள்ளார் என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

களத்தூர் கண்ணம்மா காப்பி

களத்தூர் கண்ணம்மா காப்பி

பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருந்தாலும், படத்தை பற்றிய நெகட்டிவ்களையும் ப்ளூ சட்டை மாறன் சொல்ல தவறவில்லை. இந்த படத்தின் கதை ஜெமினி கணேசன் நடித்த களத்தூர் கண்ணம்மா கதையின் காப்பி என்று கூறி ஷாக் கொடுத்த ப்ளூ சட்டை மாறன். ஆனால், படத்தை எடுத்த விதத்தில் அதை பற்றிய கவலை ரசிகர்களுக்கு வராத அளவுக்கு நேர்த்தியாக படத்தை கொடுத்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மிஸ்ஸான சீரியல்

மிஸ்ஸான சீரியல்

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை இந்தி மெகா சீரியல் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்த நிலையில், கவினின் டாடா படம் கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும், சீரியல் எஃபெக்ட் கொடுத்திருக்கும். ஆனால், இது தியேட்டர் மெட்டீரியலாக வந்துள்ளது. கவினுக்கு இந்த படம் நிச்சயம் கை கொடுக்கும் என தனது விமர்சனத்தில் வெகுவாக பாராட்ட ப்ளூ சட்டை மாறனே பாராட்டி விட்டார் என கவினின் ரசிகர்கள் அந்த விமர்சனத்தின் க்ளிப்களை எடுத்துப் போட்டு படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

வெற்றிமகன் கவின்

வெற்றிமகன் கவின்

கவினை ரசிகர்கள் வெற்றிமகன் என கொண்டாடி வரும் நிலையில், டாடா திரைப்படமும் கவினுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அடுத்ததாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் அருண் இயக்கும் ஊர்க்குருவி படத்தில் நடித்து வருகிறார் கவின். அடுத்தடுத்து வெற்றிகள் வரும் நிலையில், கவினுக்கு பொறுப்புகளும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X