ஆண் பாவம் பொல்லாதது.. அரை வேக்காடுகளுக்கு எதிரானது.. ப்ளூ சட்டை மாறனின் நெத்தியடி விமர்சனம்
சென்னை: ரியோ, மாளவிகா நடிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பெண் சுதந்திரம் என்கிற பெயரில் அவர்கள் செய்யும் அரைவேக்காட்டு தனங்களை வைத்து செய்யும் வகையில் படம் உருவாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
கோலிவுட்டின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு ஜோ படம் மட்டும்தான் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தற்போது அவர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் மாளவிகாவுக்கு ஜோடியாக ஆண் பாவம் பொல்லாதது என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர்களுடன் ஜென்சன் திவாகர், விக்னேஷ் என பலர் நடித்திருக்கிறார்கள். படமானது நேற்று வெளியானது.
எப்படி இருக்கு படம்: இந்தப் படம் பெண் சுதந்திரத்தை தவறாக புரிந்துகொண்டு பெண்கள் செய்யும் அத்துமீறல்கள், அவர்களது புரிதலின்மையை தோலுரித்து காட்டும் வகையில் அமைந்திருப்பதாக படம் பார்த்த அனைவருமே கூறிவருகிறார்கள். முக்கியமாக ஆண்களின் பார்வையிலிருந்து படம் நகர்வது புதிதாக இருக்கிறதென்று கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "சினிமாவில் வழக்கமாக பெண் அடிமைத்தனம், பெண் பாவம் பொல்லாதது போன்றுதான் பார்த்திருப்போம். ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க ஆண்கள் பக்கத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். இது ஒரு ரிஸ்க்கான கதை. ஏனெனில் இந்தப் படத்தில் பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரை பின் தொடர்ந்து பெண்ணியம் பேசுபவராக ஹீரோயின் வருகிறார். பெண்ணியம் பேசுபவர் என்றாலே பிரச்னைதான் என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
அரைவேக்காட்டுத்தனம்: ஆனால் ரொம்ப டெக்னிக்காக பெரியார், மார்க்ஸ் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையே அரைவேக்காட்டுத்தனமாக புரிந்துகொண்டு பெண்ணியம் பேசுகிறார்கள் என்பதை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார்கள். முக்கியமாக மார்க்ஸ் இடத்தில் ஹீரோயின் ஒரு ஃபோட்டோவை மாட்டியிருப்பார். அது மட்டும் கொஞ்சம் தவறாக இருந்திருந்தால் சோஷியல் மீடியாக்களில் எல்லாம் பொது மாத்து விழக்கூடிய விஷயம். ரொம்பவே அட்டகாசமாக செய்திருக்கிறார்கள்.
வசனம் எல்லாம் சூப்பர்: படத்தில் வசனங்கள் எல்லாம் சூப்பராக இருந்தது. பல சீன்கள் அருமையாக ஒர்க் அவுட் ஆகியிருந்தன.முதல் பாதி நன்றாக போனது. இரண்டாம் பாதியில்தான் பிரச்னை. படத்தின் க்ளைமேக்ஸ் நாம் கணித்தது மாதிரியே இருந்தது. படத்தின் போக்கையே நிறுத்திவிட்டு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதெல்லாம் படத்தை ஸ்லோ ஆக்கிவிட்டன. எமோஷனும் கொஞ்சம் கனெக்ட் ஆகவில்லை.
இந்தப் பெண் செய்வதுதான் தவறு என்ற கோணத்தில் படம் சென்றவரை நன்றாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் ஏன் தடம் புரண்டார்கள் என தெரியவில்லை. ஆண் மேலும் தவறாக இருக்கிறது ஈயம் பூசியது படத்தை வீக்கானது. ஆனால் ஒன்று இந்தப் படம் பெண் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத அரைவேக்காடுகளுக்கு எதிரான படம். என்ன ஒன்று இதை இன்னும் முழுதாக இறங்கி அடித்திருந்தால் சூப்பர் படமாக இருந்திருக்கும். இருந்தாலும் எடுத்துக்கொண்ட கதையை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு சென்றிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











