ஆரியன் கதையே ரொம்ப தப்பு.. எப்படி விளங்கும்?.. விமர்சனத்தில் விளாசிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் பிரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆரியன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ராட்சசன் பாணியில் க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் படம் பற்றிய விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால் கோலிவுட்டில் சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். முக்கியமாக முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி ஆகிய இரண்டு படங்களும் அவரது கரியரில் முக்கியமான படங்களாக அமைந்தன. அதிலும் ராட்சசன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான திரைப்படங்களில் மிகச்சிறந்தது என்ற பெயரையும் பெற்றது.
ஆரியன் விஷ்ணு விஷால்: சூழல் இப்படி இருக்க தற்போது அவர் ஆர்யன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை பிரவீன் என்பவர் இயக்கியிருக்கிறார். செல்வராகவன், வாணி போஜன், வாணி கபூர் என பலர் நடித்திருக்கிறார்கள். இதுவும் ராட்சசன் மாதிரியே க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது. படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஆர்யன் பட விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

ஆரியன் விமர்சனம்: அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "இந்தப் படம் எப்படி இருக்கும் என முழு படத்தையும் பார்த்து முடிவு செய்வதற்கு முன்னரே படம் ஆரம்பித்து 30 நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது ரொம்பவே தவறான கதையை எடுத்திருக்கிறார்கள் என்று. அதற்கு என்ன காரணம் என்னவென்றால்; படத்தில் ஐந்து பேர் சாகப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த ஐந்து பேர் யார் என்றே ஆடியன்ஸுக்கு அறிமுகம் செய்யவே இல்லை.
எப்படி நினைப்பது: அவர்களை அறிமுகப்படுத்தாததால் படம் பார்க்கும்போது அந்த ஐந்து பேரும் சாகட்டும் என்று நினைப்பதா இல்லை அய்யய்யோ இவார்களை கொல்கிறார்களே என்று நினைப்பதா என தெரியவில்லை. நமக்கு மைண்ட் செட் செய்யாமலேயே கதையை தொடங்கிவிட்டார்கள். இந்த ஐந்து பேர் இறந்தால் என்ன இருந்தால் என்ன என்றுதான் தோன்றுகிறது. அதுமட்டுமின்றி இவர்கள் சாவதற்கான காரணத்தை சொல்லும்போது குபீர் சிரிப்புதான் வருகிறது. மொக்கையான காரணத்தை சொல்லியிருக்கிறார்கள்.
அவர் ஏன் கஷ்டப்படணும்: அந்த ஐந்து பேரில் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இருக்கிறார். அவர் கஷ்டப்படுவதாக காட்டுகிறார்கள். அவருக்கு பென்ஷனே ஒரு லட்சம் ரூபாய்வரை வரும். அவர் ஏன் கஷ்டப்பட வேண்டும். இந்தப் படத்தில் வில்லன் ஸ்ட்ராங்கே இல்லை. ஹீரோ காற்றில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். பிறகு எப்படி படம் விளங்கும். தவறான பாதையை தேர்ந்தெடுத்து சரியான இடத்துக்கு போக முடியுமா? அதுதான் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











