ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்.. பாடி தாங்குமா?.. செம இரிட்டேட்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தில் விளாசிட்டாரு

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் இப்போது ஹேப்பி ராஜ் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை மரியா ராஜா இளஞ்செழியன் என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் ஜிவியுடன் மரியம் ஜார்ஜ், கௌரி பிரியா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று இப்படமானது திரையரங்குகளில் ரிலீஸாகி மோசமான விமர்சனத்தை ரசிகர்களிடையே பெற்றது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ஜிவி பிரகாஷ்; இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் பல விருதுகளையும் அள்ளியிருக்கும் அவர்; ஹீரோவாகவும் நடித்துவருகிறார். இதுவரை அவர் கதாநாயகனாக நடித்த படங்களில் சர்வம் தாளமயம், சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்கள் மட்டுமே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. மற்ற படங்கள் எதுவும் அவருக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. எப்படியாவது ஹீரோவாக ஒரே ஒரு வெற்றியையாவது கொடுத்துவிட வேண்டும் என்பதில் முழு முனைப்போடு உழைத்துவருகிறார் அவர்.

Blue Sattai Maran Review on Happy Raj G V Prakash Kumar Film Faces Criticism
Photo Credit:

எப்படி இருக்கு படம்?: இப்போது அவர் ஹேப்பி ராஜ் படத்தில் நடித்திருக்கிறார். அதை மரியா ராஜா இளஞ்செழியன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஜிவியுடன் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் எல்லாம் நடித்திருக்கிறார்கள். படமானது நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. ஆனால் படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதேசமயம் ஜார்ஜ் மரியானின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் அந்த வீடியோவில், "இந்தப் படத்தின் மைய கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த மைய கதையை ஆரம்பத்தில் தொடங்கிவிட்டு; மீண்டும் படத்தின் கடைசியில்தான் போகிறார்கள். இடையே இரண்டு மணி நேரம் கொலையாய் கொன்றுவிட்டார்கள். மைய கதையை படம் முழுவதும் கொண்டு வந்திருந்தால் முழு படமும் சூப்பராக இருந்திருக்கும். கடைசி கொஞ்ச நேரத்தில்தான் அதை கொண்டு வருகிறார்கள். அந்த கடைசி கொஞ்ச் நேரத்துக்காக உயிரை எல்லாம் விட முடியாது. அதுமட்டுமின்றி இவர்கள் எடுத்த கதை இவர்களுக்கே புரியவில்லை. அவர்களே குழப்பிக்கொண்டார்கள்.

Also Read
அமைதிப்படை ரீ ரிலீஸ்.. விஜய் அப்படி செய்தார்.. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?.. சத்யராஜ் ஓபன் டாக்
அமைதிப்படை ரீ ரிலீஸ்.. விஜய் அப்படி செய்தார்.. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?.. சத்யராஜ் ஓபன் டாக்

உதாரணம் இதுதான்: உதாரணத்துக்கு, படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் ஹீரோவிடம் நான் உன்னை லவ் செய்யமாட்டேன் என சொல்லி நிராகரித்துவிட்டு செல்கிறது. ஆனால் ஹீரோவோ இன்னொரு பெண்ணை காதல் செய்து அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லும்போது; ஹீரோவின் அப்பாவோ பல பெண்களின் ஃபோட்டோவை எடுத்து போட்டு இதில் ஒரு பெண்ணைத்தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆர்டர் எல்லாம் போடுகிறார். ஒரு பெண் இவரை காதலிக்கவே தயாராக இல்லாதபோது ஊரில் இருக்கும் பெரிய பெரிய டான் எல்லாம் எப்படி பெண் கொடுப்பார்கள் என தெரியவில்லை.

ஒரு பயலும் மதிக்கவில்லை: குதிரை முட்டை என்று பெயர் இருப்பதாலேயே இந்தக் குடும்பத்தை ஒரு பயலும் மதிக்க மாட்டேங்கிறான் என சீன் வைத்துவிட்டு; எனது மகன் திருமணத்துக்கு ஊர், உறவினர்களை அழைப்பேன் என சொல்கிறார். உன்னை மதிக்காத அவர்களை வைத்துக்கொண்டு ஏன் திருமணத்தை நடத்த வேண்டும். மொத்தத்தில் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்றால்; மைய கதை ஓரளவுக்கு உருப்படியானது. ஆனால் அதை காமெடியாக சொல்கிறேன் என சொல்லி பயங்கரமாக இரிட்டேட் செய்துவிட்டார்கள். இந்தப் படத்தின் ஹீரோ ஜிவி பிரகாஷ் இல்லை. ஜார்ஜ் மரியான்தான். கடைசி கொஞ்ச நேரத்தை அவர் கையில் எடுத்துவிட்டார். அந்த கொஞ்ச நேரத்துக்காக இரண்டு மணி நேரம் பாடி தாங்குமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X