GOAT Blue Sattai Maran Review: கோட் படம் பார்க்கப் போனால் நீங்கதான் ஆடு.. எச்சரிக்கும் ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இவரது சினிமா வாழ்க்கையில் 68வது படம். நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

goat vijay blue sattai maran

படத்தின் கதை ஒரு மிகவும் பழைய கதை. இது மட்டும் இல்லாமல், கதையே பழைய கதை என்றால், அதன் மேக்கிங் எப்படி இருக்கும் என உங்களுக்கே தெரிந்திருக்கும். நீங்கள் யூகித்ததை விடவும் மிகவும் மோசமாகத்தான் படத்தை எடுத்து வைத்துள்ளனர். தொடக்கத்தில் கென்யாவில் ஒரு சண்டைக் காட்சி வருகின்றது. அங்கிருந்து ஒன்றை எடுத்து வருகின்றார்கள். அதை வைத்து இவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து படத்தில் சொல்லப்படவில்லை. அதேபோல் பேங்காங் செல்கின்றார்கள். அங்கு சென்று ஒன்றை எடுத்து வருகின்றார்கள், அது எதற்கு எனவும் தெரியவில்லை.

goat vijay blue sattai maran

படத்தில் இரண்டு விஜய் உள்ளனர். ஒரு விஜய் இன்னொரு விஜய்யை அடிக்கும்போது, விஜய் அடிக்கின்றார் என சந்தோசப்படுவதா, விஜய் அடிவாங்குகின்றார் என வருத்தப்படுவதா எனத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தின் கதைக்கு எதுக்கு டபுள் ஆக்‌ஷன். டபுள் ஆக்‌ஷன் என்றால், இவர் இடத்தில் அவர் சென்று, ஆள்மாறாட்டம் செய்கின்றார் என்பது போன்ற ஒரு சுவாரஸ்யமும் இல்லை. இதுமட்டும் இல்லாமல், டீ - ஏஜிங் டெக்னாலஜி இருக்கின்றது என்பதற்காக பயன்படுத்தியுள்ளார்களே தவிர, டீ- ஏஜிங்கினாலும் படத்திற்கு எந்த விதமான நன்மையும் இல்லை.

goat vijay blue sattai maran

யுவன் தான் வில்லன்: படத்தின் உண்மையான வில்லன் யார் என்றால், அது இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பாடல்களும் சரியில்லை, பின்னணி இசையும் சரியில்லை. க்ளைமேக்ஸில் கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஒரு சண்டைக் காட்சி இருக்கின்றது. அதற்கு சிறப்பான பின்னணி இசை அமைக்காமல், கிரிக்கெட் கமெண்ட்ரியை ஓடவிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாமல், அது முழுக்க முழுக்க தோனி புராணமாக உள்ளது.

goat vijay blue sattai maran

ரெஃபரன்ஸ்: படத்தில் மங்காத்தா படையப்பா, தூள் உள்ளிட்ட பல படங்களின் ரெஃபரன்ஸ் உள்ளது. ஆனால் அவற்றை வைத்து இந்தப் படத்தை ஒப்பேற்றலாமே தவிர படத்தின் திரைக்கதைக்கு சுத்தமாக உதவாது. வெங்கட் பிரபு ஸ்கிரிப்டை தரமாக செய்யாமல், டெக்னாலஜியை அதிகமாக படத்திற்குள் பயன்படுத்தியுள்ளார். இது படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.

goat vijay blue sattai maran

முடியல: படம் மூன்று மணி நேரம் ஓடுகின்றது. படத்தின் கதை மிகவும் பழைய கதை. திரைக்கதை அதைவிட மோசம். படத்தில் வித்தியாசம் என்றால் அது டி- ஏஜிங். இந்தப் படத்தின் கதைக்கு 2 மணி நேரம் அல்லது இரண்டை கால் மணி நேரத்தில் படத்தினை எடுத்திருந்தாலாவது, படம் பார்க்கும் அளவிற்கு இருந்திருக்கும். மூன்று மணிநேரம் படத்தை எடுத்துவைத்துள்ளார்கள். எங்களால் படமே பார்க்க முடியவில்லை. இதையும் மீறி நீங்கள் படம் பார்க்கப்போனால், நீங்கதான் ஆடு... அதாவது கோட்" எனக் கூறியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

goat vijay blue sattai maran

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X