DRISHYAM 3 Blue Sattai Maran Review: பொங்கல் சாப்பிட்ட மாதிரி இருக்கு.. பர்னிச்சரை உடைத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் திரிஷ்யம் 3. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் மே 21 ஆம் தேதி வெளியானது. படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததால் படத்திற்கான புக்கிங் உலகம் முழுவதும் தாறுமாறாக இருந்தது. இப்படி இருக்கையில் திரிஷ்யம் 3 படத்தின் விமர்சனம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவரது விமர்சனத்தில், " இந்த படத்தின் முதல் பாகம், கேபிள் ஆப்ரேட்டரான ஜார்ஜ் குட்டி நிம்மதியாக வாழ்ந்து வருபவர் தனது குடும்பத்திற்கு வந்த பிரச்னையை சமாளிக்க தற்காப்புக்காக செய்யப்ப கொலையை, மறைத்து குடும்பத்தை காப்பாற்ற தனது சினிமா அறிவை பயன்படுத்துகிறார் என்பது தான். இரண்டாவது பாகத்தில், இந்த வழக்கு இன்னும் முடியவில்லை, எப்போது வேண்டுமானாலும் மறு விசாரணை செய்யப்படலாம். அப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பார், அவை சுவாரஸ்யமாக இருந்தது.

மூன்றாவது பாகத்தில் பெரிய பணக்காரனாக மாறும் ஜார்ஜ் குட்டி தான் எழுதிய கதையை படமாக தயாரிக்கிறார். தனது மகள் வளர்ந்துவிட்டதால் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஒவ்வொரு வரனும் தட்டி தட்டி போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை தேடிக் கண்டு பிடிக்கிறார், அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் கதை.

Blue Sattai Maran Reviews Drishyam 3 Feels Like Overeating Pongal Harsh Verdict Goes Viral

சுவாரஸ்யம்: படத்தின் முதல் இரண்டு மணி நேரம் பொங்கல் சாப்பிட்டது போல இருந்தது. கடைசி அரை மணி நேரம் படம் நன்றாக உள்ளது. அதற்கு காரணம் தனக்கு வரும் பிரச்னைகள் என்ன? யார் காரணம் என்று தேடித்தான் செல்கிறாரே தவிர, எதிர்வினை ஆற்றாமல் இருக்கிறார். பிரச்னை வந்த பின்னர்தான் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறார். அதுவும் கடைசி அரை மணி நேரம் தான் இதுவும் உள்ளது. பெரிய அளவில் சுவாரஸ்யமாகவும் இல்லை.

மொக்கை பிளான்: மறுபடியும் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்றால், ஜார்ஜ் குட்டிக்கு எதிராக சரியான ஆதாரம் தேவை. அதற்கான ஆதாரங்களை திரட்ட முயற்சி செய்கிறார்கள். இதில் என்னவென்றால், ஜார்ஜ் குட்டி தொடர்பான ஆட்களைச் சந்திக்கச் செல்லும் போது, அந்த தகவல் உடனே ஜார்ஜ் குட்டிக்கும் தெரிந்து விடுகிறது. இதனால் சுவாரஸ்யம் இல்லாமல் உள்ளது. முந்தைய பாகங்களில் ஆஷா சரத்தின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருந்தது. ஆனால் இந்த பாகத்தில் சித்திக்கின் கதாபாத்திரம் தான் ஜார்ஜ் குட்டிக்கு எதிராக இயங்குகிறது. அவரும் மொசாட் லெவலுக்கு பிளான் செய்கிறார், ஆனால் எல்லாமே மொக்கை மொக்கையாக உள்ளது.

Blue Sattai Maran Reviews Drishyam 3 Feels Like Overeating Pongal Harsh Verdict Goes Viral

ஏமாற்றம்: இந்த படத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முந்தைய பாகங்களை பார்த்திருக்க வேண்டும். முந்தைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் இந்த பாகம் ஏமாற்றமான படமாகத்தான் இருந்தது. ஆனால் நான்காவது பாகத்திற்கு லீட் கொடுத்துள்ளார்கள். சரக்கு முடிந்துவிட்டதால் இத்துடன் கடையை மூடிக் கொள்வது நல்லது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்கச் சென்றால் ஒரு சுமாரான படம் பார்த்த உணர்வைக் கொடுக்கும்" என்று தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X