துல்கர் சல்மானின் காந்தா.. நீட்டி நிமிர்ந்து படுத்துடுச்சு.. மொக்கைதான்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் அதிரடி
சென்னை: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் காந்தா. இதில் அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி, ராணா டகுபதி, பக்ஸ், வையாபுரி என பலர் நடித்திருக்கிறார்கள். நேற்று வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை எல்லாம் பெறவில்லை. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் காந்த படம் பற்றிய தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.
மலையாளம், தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் என்ற மெகா ஹிட் படத்தில் நடித்துவிட்டு இப்போது காந்தா படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரகனி முக்கியமான கேரக்டரையும் ஏற்றிருக்கிறார். செல்வமணி செல்வராஜ் என்பவர் படத்தை இயக்க துல்கரும், ராணாவும் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள்.
நேற்று ரிலீஸ்: இதற்கு முன்பு துல்கர் நடித்திருந்த லக்கி பாஸ்கர் பட ரிசல்ட் பற்றி அனைவருக்குமே தெரியும். மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது. அந்தத் தெம்போடுதான் இதில் நடித்து, தயாரிக்கவும் செய்திருந்தார். அதே வெற்றி இதிலும் கிடைக்குமா என்ற ஏகப்பட்ட ஹைப்போடு நேற்று படம் ரிலீஸானது. ரசிகர்களும் அதே எதிர்பார்ப்போடுதான் படம் பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள்.

எப்படி இருக்கு படம்: ஆனால் படம் முழுவதுமாக ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலைத்தான் இயக்குநர் திரைக்கதையாக மாற்றியிருந்தார். ஆனால் அதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்று ஓபனாகவே ரசிகர்கள் சொன்னார்கள். அதேசமயம் துல்கரின் நடிப்பு மிரட்டிவிட்டதாகவும்; கண்டிப்பாக அவருக்கு விருதுகள் கிடைக்கும் என்றும் ஆரூடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
வசூலிலும் அடி: விமர்சன ரீதியாகத்தான் படம் அப்படி இப்படி ரிசல்ட்டை சந்தித்தது என்றால்; வசூலிலும் அடிதான். ரிலீஸான முதல் நாளான நேற்று வெறும் நான்கு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் காந்தா படம் பற்றிய தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
ப்ளூ சட்டை விமர்சனம்: அவர் தனது யூடியூப் சேனலில், "படத்தின் முதல் பாதியில் கதையோ, திரைக்கதையோ பிரமாதமாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் பல சீன்கள் நன்றாக இருந்தன. அதற்கு முக்கியமான காரணம் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்புதான். இரண்டு பேரும் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார்கள். ஒருவர் கோட்டை விட்டிருந்தால்கூட சீனோ, படமோ நின்றிருக்காது. அவ்வளவு பிரமாதமாக நடித்திருந்தார்கள். அதேபோல் பாக்யஸ்ரீ போர்ஸும் அட்டகாசமாக நடித்திருந்தார். வெறும் மூன்று பேரின் நடிப்பிலேயே முதல் பாதி போய்விட்டது.
நீட்டி நிமிர்ந்து படுத்துடுச்சு: இரண்டாவது பாதி அப்படியே நேர் எதிராக அமைந்துவிட்டது. செகண்ட் ஹாஃபில் இன்வஸ்டிகேஷன் அது இது என்று போய் நீட்டி நிமிர்ந்து படம் படுத்துடுச்சு. ராணாவின் நடிப்பும் செயற்கைத்தனமாக இருந்தது. ஒரு நாடகத்தை பார்ப்பது போன்று இருந்தது. படத்தில் வசனங்கள் எல்லாம் சூப்பராக இருந்தன. கேமரா ஒர்க்கும் நன்றாக இருந்தன. கதையோ திரைக்கதையோ இல்லாத படத்தை இரண்டே முக்கால் மணி நேரம் எடுத்திருக்கிறார்கள். முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதி மொக்கைதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











