ஒரே வார்த்தையில சோலியை முடித்த ப்ளூ சட்டை மாறன்.. குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர் ரியாக்ஷன்!
சென்னை: நடிகர் அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு அசத்தலாக செகண்ட் லுக் போஸ்டர் அப்டேட்டை நேற்று ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டு அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கினார்.
விடாமுயற்சி படத்தின் அப்டேட் குறித்து மகிழ் திருமேனி வாயே திறக்காமல் இருந்து வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் படுஜாலியாக படத்தை உருவாக்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணப் போறேன் என உறுதியாக அறிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது நடு விரல் சர்ச்சை கிளம்பிய நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை பார்த்து விட்டு ஏகப்பட்ட மீம்கள் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது பங்குக்கு அந்த போஸ்டரை ட்ரோல் செய்துள்ளார்.
புள்ளிங்கோவா மாறும் அஜித்?: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பஹீரா திரைப்படத்தில் பிரபுதேவா பல கெட்டப்புகளை போட்டு படாத அவஸ்த்தை பட்ட நிலையில், அஜித் குமாரை தற்போது புள்ளிங்கோவாக மாற்றி வருகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்களை தரமாக கொடுத்து தூள் கிளப்பி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன் அதுவே போதும் என கொண்டாடி வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன்: அஜித் குமாரின் புதிய கெட்டப்பை பார்த்து "ஹய்யோ" என ஒற்றை வார்த்தையில் மொத்த சோலியையும் முடித்து விட்டார் ப்ளூ சட்டை மாறன் என நெட்டிசன்கள் தற்போது அவரது ட்வீட்டை அதிகமாக ஷேர் செய்து அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

விஜய்க்கு போட்டியாக: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அப்டேட்கள் வெளியான நிலையில், உடனடியாக அஜித் ரேஸ் கார் ஓட்டிய வீடியோக்களை அன்றைய தினமே இறக்கி சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார். அஜித்துக்கு இன்செக்யூரிட்டி ரொம்பவே அதிகம் என விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் தற்போது மீண்டும் அஜித்தை கலாய்த்துள்ளார்.
விடாமுயற்சி: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கும் குட் பேட் அக்லி படத்தை பொங்கலுக்கும் வெளியிட தீவிரமாக உழைத்து வருகிறார். அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











