பீஸ்ட்டை ரோஸ்ட் செய்து ஓராண்டு நிறைவு.. விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக பெரிய சம்பவம் சிக்கவில்லையே என அமைதியாக இருந்த நிலையில், இன்று மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து ட்வீட் போட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை நேற்று விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் ஹாஷ்டேக் உடன் கொண்டாடிய போது சைலன்ட்டாக இருந்த ப்ளூ சட்டை மாறன் இன்று காலையிலேயே சம்பவத்தை செய்து விட்டார்.
பீஸ்ட் படத்துக்கு வேட்டு வைத்த கேஜிஎஃப் 2 வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது என்பதை குறிக்கும் விதமாக அவர் போட்ட ட்வீட் விஜய் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
பீஸ்ட் ஓராண்டு நிறைவு: கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கி யாருப்பா இவரு என நெல்சனை கொண்டாடி வந்த ரசிகர்கள் விஜய்யின் பீஸ்ட் படத்தை ரொம்பவே எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதியே வெளியான பீஸ்ட் படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய்யையும் இயக்குநர் நெல்சனையும் சர்வதேச அளவில் ட்ரோல் செய்து படத்தின் சோலியை முடித்தனர்.'

அவன் பக்கம் போயிடாதீங்க சார்: ஏப்ரல் 14ம் தேதி யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு மேலும், சரியான வில்லனாக மாறி விட்டது. அரபிக் குத்து பாட்டு எல்லாம் டிரெண்டான நிலையிலும், கேஜிஎஃப் 2 படத்தின் ஸ்க்ரீன் பிளேவுக்கு முன்பாக எந்தவொரு இந்திய படமும் நிற்க முடியாத அளவுக்கு வசூலில் இமாலய சாதனையை கடந்த ஆண்டு செய்தது.

கேஜிஎஃப் 2 ஓராண்டு நிறைவு: இந்தியாவுக்கே சிஇஓ மற்றும் ஒன்லி பீஸ் என யஷ் சொல்லும் வசனங்களும் கலாஷ் நிகோவாவை எடுத்து அவர் திரையரங்கில் தமிழ் புத்தாண்டையே தீபாவளியாக மாற்றியது எல்லாம் மறக்கவே முடியாது. அந்த படம் ரிலீஸ் ஆகி ஓராண்டு ஆவதை ஒட்டுமொத்த கேஜிஎஃப் 2 ரசிகர்களும் இன்று டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: இந்நிலையில், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ப்ளூ சட்டை மாறன் "பீஸ்ட்டை ரோஸ்ட் செய்து ஓராண்டு நிறைவு" என கமெண்ட் போட்டு தற்போது விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார்.

வழக்கம் போல விஜய் ரசிகர்கள் வரிசையாக வந்த ஆபாச வார்த்தைகளால் ப்ளூ சட்டை மாறனை கழுவி ஊற்றி வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆண்டி இண்டியன் படத்தையும் விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











