பணம் வருதுனு இப்படியா? பேரனை வைத்து சம்பாதிக்கும் ரோபோ ஷங்கர்.. விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து பிரபலமான இவர் வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படத்தில் நடித்து புகழின் உச்சியை அடைந்தார். அண்மையில் இவரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திருவிழாப்போல ஒரு வாரம் அசத்தலாக நடந்தது. அந்த ஒரு வாரமும் சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும் இவர்களின் வீடியோக்கள் தான் வலம் வந்தன.

இதைத்தொடர்ந்து, இந்திரஜாவின் வளைகாப்பு விழாவும் விமர்சையாக நடந்தது. அந்த விழாவிலும் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது, இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு கமல்ஹாசன் நட்சத்திரன் என பெயர் வைத்தார். அதைத் தொடர்ந்து, இந்திரஜா தனது குழந்தையை விதவிதமாக அலங்கரித்து போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் குழந்தையின் 100வது நாளை, பெரிய நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடி இருந்தனர். இந்த வீடியோ மற்றும் போட்டோக்களை எல்லாம் பார்த்து கடுப்பான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ரோபோ சங்கரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

robo shankar indraja blue sattai Maran

ப்ளூ சட்டை மாறன்: அதில், போதும் ரோபோ சங்கர். உங்க இம்சை தாங்கல, கதறும் மக்கள். விஜய் டிவியில் மிமிக்ரி செய்து பெயர் வாங்கினார் ரோபோ சங்கர். ஆனால் தனித்துவமாக காமடி செய்ய தெரியாதவர். தப்புதப்பாக ஆங்கிலம் பேசுவது போல் நடிப்பதே காமெடி என நம்பி பல படங்களில் மொக்கை போட்டார். காலைல கோழி கூவுற காமடி ஒன்றுதான் இவருக்கான ஒரே அடையாளம். இவரது காமெடி எடுபடாததால் சிவகார்த்திகேயன் இவரை கழற்றி விட்டார். அதன்பிறகு யூட்யூப் சேனல்கள் இவரை மொத்தமாக லீசுக்கு எடுத்து விட்டது. மருமகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அனைத்து வீடியோக்களிலும் தோன்றினர்.

எரிச்சலா இருக்கு: கல்யாணம், வளைகாப்பு, ஷாப்பிங் என 24 மணிநேரமும் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவாக போட்டு அறுக்கிறார்கள். எந்த புதுப்படம் வந்தாலும் அதன் செலப்ரிட்டி ஷோவுக்கு மொத்த குடும்பத்துடன் ஆஜராகி விடுகிறார். தற்போது இவர் தாத்தா ஆன பிறகும்.. இவரது பேரனை வைத்து வீடியோ போடுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் கணிசமான தொகை பெறுவதாக கூறப்படுகிறது. பணம் வருகிறது என்பதற்காக 24 மணி நேரமும் உங்கள் குடும்பத்தின் சாதாரண நிகழ்வகளை கூட வீடியோவாக காட்டுவது கூச்சமாக இல்லையா? தயவு செய்து உங்கள் பேரனையாவது இந்த போலி வெளிச்சத்தில் இருந்து விலக்கி வையுங்கள். செலப்ரிட்டி எனும் பெயரில் உங்களை பீடித்துள்ள இந்த பப்ளிசிட்டி மோகம் எரிச்சலை மட்டுமே தருவதாக பலர் கூறுகிறார்கள். தாத்தா ஆனபிறகும் திருந்தாவிட்டால்.. ஒன்றும் சொல்வதற்கில்லை என பதிவிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவைப் பார்த்த சிலர், நீங்கள் சொல்வது சரி தான், அந்த பிஞ்சு குழந்தையை வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றும், சிலர், நீங்க படத்தின் ரிவ்யூ செய்யும் போதும் எங்களுக்கு கடுப்பாத்தான் இருக்கு, அதற்காக அதை செய்யாமல் இருக்குறீங்களா.. அது அவர்களின் விருப்பம் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X