அனிருத் அலர்ட் பண்ணியிருக்காரு.. அவரை தப்பா நினைச்சிட்டோமே.. ப்ளூ சட்டை மாறன் இந்தியன் 2 விமர்சனம்!
சென்னை: இந்தியன் 2 படத்தில் "தாத்தா வராரு கதறவிடப் போறாரு" பாடலை அனிருத் போட்டு விட்டார் என சோஷியல் மீடியாவில் பலரும் அவரை டார்கெட் செய்து அடித்தனர். ஆனால், உண்மையிலேயே படத்தின் கதையை கேட்டு புரிந்துக் கொண்டு ரசிகர்களை அலர்ட் செய்யவே அனிருத் அப்படியொரு பாடலை போட்டுள்ளார் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் நெத்தியடியாக அடித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே தனக்கு ரொம்பவே பிடித்த படம் இந்தியன் படம் தான். அப்போதே 70 வயது முதியவர் எப்படி சண்டை போடுவார். அவரது உடலில் நடுக்கம் எப்படி இருக்கும் என ஷங்கர் பார்த்து பார்த்து செய்திருப்பார். அதற்காகத்தான் அந்த படம் தேசிய விருதை வாங்கியது.

ஆனால், இந்தியன் 2 தாத்தாவை ஒரு சக்கர சைக்கிளில் சென்னை முழுவதும் சுற்ற விட்டு அவர் மீது இருந்த மரியாதையை டோட்டல் டேமேஜ் செய்து விட்டார் ஷங்கர் என ப்ளூ சட்டை மாறன் போட்டு விளாசியுள்ளார்.
குவியும் நெகட்டிவ் விமர்சனங்கள்: பிரசாந்த் ரங்கசாமி முதல் இந்தியன் 2 படத்தை பார்த்த யூடியூப் விமர்சகர்கள் பலரும் துணிச்சலாக ஷங்கர் இந்த படத்தை அணுகவில்லை என்றும் இலவச பொருட்களை காட்டும் போது கூட டிவியை மறைத்து விட்டார் என்றும் கிரானைட் குவாரி ஊழலை வெளிமாநிலத்தில் பேசும் ஷங்கர் மதுரையில் நடக்கும் விஷயங்களை ஏன் பேசுவதில்லை என விளாசியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகள் முன்னதாக வெளியாகி இப்படியொரு படம் தமிழ் சினிமாவில் வந்ததே கிடையாது என பாராட்டுக்களை பெற்றது. அந்த படத்தை போய் ஷங்கர் இப்படி கேவலமாக எடுத்து வைத்து விட்டாரே என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கழுவி ஊற்றியுள்ளார். ஆரம்பத்தில் படம் நல்லாத்தான் தொடங்கியது. இளைஞர்கள் மாறினால் தான் நாட்டை திருத்த முடியும் என்றும் ஒவ்வொரு வீடும் சுத்தமானால் தான் நாடு சுத்தமாகும் என்று சொன்னதெல்லாம் ஓகே தான்.
ஆனால், இரண்டாம் பாதியில் அந்த படத்தை எடுத்துக் கொண்ட கதையை விட்டு விட்டு தாத்தாவுக்கு மெட்ரோ டிரெயின் ஃபைட் வைக்கிறேன் பாருங்கன்னு ஷங்கர் ஒரு அரை மணி நேரத்துக்கு வயசான தாத்தாவை இஷ்டத்துக்கு ஓட விட்டு அவரையும் கஷ்டப்படுத்தி நம்மையும் கஷ்டப்படுத்திட்டாரு என விமர்சித்துள்ளார்.
அனிருத் அலர்ட்: இந்தியன் 2 படத்தின் கதைக்கு அனிருத் இந்தளவுக்கு மியூசிக் போட்டு பாடல்கள் கொடுத்ததே பெரிய விஷயம். அதிலும், "தாத்தா வராரு, கதற விடப்போறாரு" என பாட்டுப் போட்டு ரசிகர்களை அவர் அலர்ட் செய்திருக்கிறார். நாம் தான் அவரது நல்ல மனதை புரிந்துக் கொள்ளாமல் அவரை வச்சு செய்து விட்டோம். சாரி அனிருத் என ப்ளூ சட்டை மாறன் ஃபுல் ஃபார்மில் இந்தியன் 2 படத்தை துவைத்து எடுத்து விட்டார்.
எஸ்.ஜே. சூர்யா கெட்டப்: இந்தியன் 2 படத்தில் கேமரா ஒர்க் நல்லா இருந்தது, செட் வொர்க் பிரமாதம். மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா உள்ளிட்டோரை காட்டிய விதம் அவர்கள் காட்சிகளுக்கும் குரலுக்கும் பயன்படுத்திய டெக்னாலஜி எல்லாம் அருமை. கமல்ஹாசனின் கெட்டப்புகளும் அருமை. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா கெட்டப்பில் வந்ததும் சூப்பர் என வழக்கம் போல தனது நய்யாண்டி தனத்துடன் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











