கங்குவா ஜெயித்திருந்தால் ஜோதிகா கோயிலுக்கு போயிருப்பாங்களா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி!

சென்னை: கங்குவா படத்தை 300 கோடி ரூபாய் கொட்டி எடுத்து நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது குடும்பமோ அமைதியாக இருக்கும் நிலையில், சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா மட்டும் கோயில் கோயிலாக சுற்றுவது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வந்த நிலையில், இதுவும் நடிப்பு தான் பாஸ் என ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படம் நல்லவேளை வேட்டையன் படத்துடன் வெளியாகவில்லை என்றும் இல்லை என்றால் மழையில் மாட்டி சிக்கலாகியிருக்கும் என்றெல்லாம் மற்ற படங்களுடன் கம்பேர் செய்து ஞானவேல் ராஜா பேசியிருந்தார்.

blue sattai maran suriya jyothika


ஆனால், கங்குவா திரைப்படம் சோலோ ரிலீஸ் ஆன நிலையில், கூட அந்த படம் ரசிகர்களை கவராமல் நஷ்டமடைந்த நிலையில், அதையும் விமர்சனம் செய்பவர்கள் மீதும், ரசிகர்கள் மீதும் எழுதி விட்டனர். நடிகை ஜோதிகா இந்து கோயில்களுக்கு செலவு செய்யும் பணத்தை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம் என சொன்னது தான் இந்த சர்ச்சைக்கே காரணம் என பஞ்சாயத்து கிளம்பிய நிலையில் தான் அவர் கோயிலுக்கு சென்றுக் கொண்டிருக்கிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன் ஒருவர் எழுப்பிய நிலையில், அதனை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்னதாக: லியோ படம் வெளியாவதற்கு முன்னதக லோகேஷ் கனகராஜ் திருப்பதிக்கு சென்று வந்தார். பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்பாக அந்த டீமும் திருப்பதி விசிட் அடித்தது. ஆனால், படம் வெளியாகி தோல்வியை தழுவிய நிலையில், தற்போது ஜோதிகா மற்றும் சூர்யா கோயில் கோயிலாக செல்வது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர். அடுத்த படமாவது வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழிபாடு நடக்கிறதா? என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

blue sattai maran suriya jyothika


ஜோதிகா கோயில் டூர் டிராமாவா?: ”கணேசன், ஆன்மீக பற்றாளர், திருவண்ணாமலை:

கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட.. பள்ளி, மருத்துவமனைக்கு பணம் தாருங்கள் என சொல்லாமல்... கோவிலுக்கு பணம் தருவதைப்போல பள்ளி, மருத்துவமனைக்கும் தாருங்கள் எனக்கூறி இருந்தால் சர்ச்சையே வந்திருக்காது.

தற்போது வந்த படத்தின் தோல்விக்கு இந்த சர்ச்சை பேச்சும் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து.. திடீரென கோவில் கோவிலாக செல்வதும், அதை ஊடகங்களுக்கு தெரிவிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் ..நான் அன்று பேசியது தவறு என பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மட்டும் ஈகோ தடுக்கிறது.

ஒருவேளை இந்தப்படம் ஜெயித்திருந்தால்.. இந்த திடீர் பக்தியும், அதை விளம்பரப்படுத்தும் யுக்தியும் வந்திருக்காது.

சினிமாவை விட நிஜ வாழ்க்கையில் இவர்கள் அருமையாக நடிக்கிறார்கள்.

மக்களையும், கடவுளையும் ஏமாற்ற நினைப்பது உண்மையான பக்தியாகாது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ப்ரமோசனில் அளவுக்கதிகமாய் பேசியது முதல்... தற்போதைய திடீர் ஆன்மீக பற்று வரை.. எல்லாமே நாடகம். எதுவுமே மக்களிடம் எடுபடாது.

தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதும், உண்மையான மனமாற்றம் வந்து கடவுளை வணங்குவதும் மட்டுமே ஒரே தீர்வு” என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுக் குறிப்பிட்டுள்ளார்.


ஜோதிகா தவறாக பேசவில்லை: கோயிலுக்காக நிறைய செலவு செய்கிறீர்கள், உண்டியலில் பணத்தை போடுறீங்க, பெயிண்ட் அடிக்கிறீங்க, ப்ளீஸ் அதே அளவு காசை மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்க என்று தான் ஜோதிகா சொன்னார் என்றும் கோயில்களுக்கு செலவு செய்ய வேண்டாம் என்று அவர் கூறவில்லை. அவரது பேச்சை தவறாக புரிந்துக் கொண்டு தான் ட்ரோல் செய்து வருகிறார்கள் என்றும் ஜோதிகா மற்றும் சூர்யா ரசிகர்கள் அவர் பேசிய காட்சிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X