கமலுக்கா ஓட்டுப் போட போறீங்க.. அவரோட அரசியல் தசாவதாரத்தை பாருங்க.. வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சினிமா விமர்சனங்களை தாண்டி அரசியல் பக்கமும் அவ்வப்போது எட்டிப் பார்த்து வரும் ப்ளூ சட்டை மாறன் கமல்ஹாசன் குறித்து போட்டிருக்கும் புதிய போஸ்ட் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் என்பதை ஆரம்பிக்கும் போது திமுக, அதிமுக என இரு கட்சிகளையும் விமர்சனம் செய்து விட்டுத் தான் கமல் கட்சியை தொடங்கி இருந்தார். ஆனால், பாஜகவிடமே தோல்வியை தழுவிய நிலையில், தற்போது திமுகவிடம் அப்படியே சாய்ந்து வருகிறார் கமல் என்கிற விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் குறித்து கமல் அன்றும் இன்றும் பேசியதை பாருங்கள் என ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று தீயாக பரவி வருகிறது.

Blue Sattai Maran roasts Kamal Haasan for his double standard among DMK

ரஜினி, விஜய்யை தொடர்ந்து கமல்: சினிமா பிரபலங்களை தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே பெயர் வாங்கி வரும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் ரஜினிகாந்தை வெறித்தனமாக விளாசி வந்தார். அதன் பின்னர், லியோ படத்தில் ஏற்பட்டு வரும் குளறுபடிகளை பட்டியல் போட்டு பொளந்து வருகிறார். இந்நிலையில், தற்போது கமல் பக்கம் தாவியிருக்கிறார்.

கமலுக்கா ஓட்டுப் போட போறீங்க: கமலுக்கா ஓட்டுப் போட போறீங்க என்கிற ஷார்ப்பான கேள்வியை முன் வைத்து "கமலின் அரசியல் தசாவதாரம். இவருக்கா வரும் தேர்தலில் வாக்களிக்க போகிறீர்கள்?" என்கிற ட்வீட்டை தற்போது போட்டுள்ளார். மேலும், அதற்கு கீழ் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

Blue Sattai Maran roasts Kamal Haasan for his double standard among DMK

ஸ்டாலினை கிண்டல் செய்து: பழைய வீடியோவில் கமல்ஹாசன் ஸ்டாலினை கிண்டல் செய்து பேசும் காட்சிகளும், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசும் வீடியோ காட்சிகளையும் கமல் பற்றிய கேள்வியை ஸ்டாலினிடம் முன் வைக்க நான் அரசியல் பற்றி பேசுகிறேன் கமல் ஒரு சினிமாக்காரர் என ஸ்டாலின் நக்கலடித்த வீடியோ காட்சிகளையும் ஒன்றாக இணைத்துப் போட்டு தனது அடுத்த வேலையை ஆரம்பித்துள்ளார்.

அவரது ட்வீட்டுக்கு கீழ் ஆண்டவரின் ரசிகர்கள் லியோ படத்தில் வருவதை விட மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும், நீங்க அரசியல் பக்கம் புதுசோ, அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் ப்ளூ சட்டை என்றும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X