Blue Sattai Maran Empuraan Review: படம் மட்டும் தான் நல்லா இல்லை.. மத்ததெல்லாம் ஓகே.. எம்புரான் விமர்சனம்!
சென்னை: இந்த வாரம் வெளியான 2 படங்களுக்குமே ப்ளூ சட்டை மாறன் கலவையான விமர்சனத்தை தான் கொடுத்திருக்கிறார். வீர தீர சூரன் படத்தையே சுமார் என விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் நல்லாவே இல்லை என டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.
லைகா தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்கள் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில், 2ம் பாகமே மெகா வெற்றி பெற திணறியது.

லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி படங்களின் ரிசல்ட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எம்புரான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தில் கிராண்டியர் தான் இருக்கிறதே தவிர படம் நல்லா இல்லை என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் படம் போல: ஏகப்பட்ட வெளிநாடுகளையும் பிரம்மாண்ட லொகேஷன்களையும் காட்டி ஜேம்ஸ் பாண்டி படங்களில் மிகப்பெரிய கதையை சொல்வது போல சீன் காட்டுவார்கள். அதுபோலவே இந்த படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் கையாண்டிருக்கிறார். அவர் இயக்கத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் முதல் பாகமே சுமாரான படம் தான் என்றாலும் அந்த படத்தில் ஒரு எமோஷனல் கனெக்ட் அதிகமாகவே இருக்கும். ஆனால், எம்புரான் படத்தில் அது கொஞ்சம் கூட இல்லாதது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியிருக்கிறதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.
படம் மட்டும் நல்லா இல்லை: படத்தின் பிரம்மாண்ட செட்கள், லொகேஷன்கள், நடிகர்களின் காஸ்டிங், புரொடக்ஷன் வேல்யூ, பிஜிஎம், பில்டப் என எல்லாமே நல்லா இருக்கு. ஆனால், படம் மட்டும் தான் நல்லா இல்லை. எதற்காக இதெல்லாம் நடக்கிறது. மதவாத அரசியல் நுழைவது ஆபத்து என்பதை குறிப்பிட்டு ஆரம்பிக்கப்படும் அந்த இடத்தை விட்டு விட்டு தேவையில்லாமல் வேர்ல்ட் டூர் சென்று வருவது தான் வேடிக்கை என கலாய்த்துள்ளார்.
நெகட்டிவ் விமர்சனங்கள்: மோகன்லாலின் பிரம்மாண்ட படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக அடி வாங்கி வரும் நிலையில், எம்புரான் படமும் விமர்சகர்களிடம் சிக்கித் தவித்து வருகிறது. ஆனால், மோகன்லால் ரசிகர்கள் இந்த படம் சலார், கேஜிஎஃப் போல தாறுமாறாக உள்ளதாக கொண்டாடி வருகின்றனர். பாக்ஸ் ஆபீஸில் கூடிய சீக்கிரமே இந்த படம் எந்தளவுக்கு மாஸ் காட்டும் என்பது முதல் வார முடிவில் தெரிந்துவிடும்.
பிருத்விராஜ் சொதப்பிய இடம்: இயக்குநராக இப்படியொரு படத்தை ஒரு ஹீரோ எப்படி கொடுத்தார் என மேக்கிங்கில் வியக்க வைத்த பிருத்விராஜ் சுகுமாரன், எந்தவொரு கதாபாத்திரத்துக்கும் ஆழமான மற்றும் அழுத்தமான கதையை சொல்லாமல் அப்படியே மேம்போக்காக சென்று இருப்பது தான் படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு என்றும் கடைசியில் பிருத்விராஜ் கதாபாத்திரத்திற்கான படமாக மோகன்லாலின் எம்புரான் மாறிவிட்டது தான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது எனக் கூறுகின்றனர். மோகன்லாலுக்கு அடுத்து த்ரிஷ்யம் 3 படம் தான் வெயிட்டான சம்பவமாக அமையுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











