Barroz Blue Sattai Review: மோகன்லாலுக்கு 2வது மரண அடி.. பரோஸ் படத்தை பந்தாடிய ப்ளூ சட்டை மாறன்!
திருவனந்தபுரம்: நடிகர் சூர்யா போல மோகன்லாலுக்கும் திடீரென பாகுபலி மோகம் பிடித்துக் கொண்டதா என்று தெரியவில்லை. தொடர்ந்து பீரியட் படம் பண்ணுகிறேன் என்கிற பெயரில் மரண அடி வாங்கி வருகிறார். ஏற்கனவே பிரம்மாண்டமாக உருவான அரபிக் கடலின் சிங்கம் படம் அட்டு ஃபிளாப் ஆனது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் மலையாளத்தில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் படமும் மோகன்லாலுக்கு தோல்வியை கொடுத்தது.
இந்நிலையில், ஆண்டு இறுதியில் எம்ஜிஆர் போலவே நானும் இயக்கி நடித்து ஹிட் கொடுக்கிறேன் என நினைத்த இருவர் பட ஹீரோவுக்கு பரோஸ் திரைப்படமும் பல்பு கொடுத்துவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பரோஸ் படத்தை பார்த்துவிட்டு தூங்காமல் வருவதே பெரிய சாதனை எனக்க்கூறியுள்ளார்.

மோகன்லால் இயக்கத்தில் முதலும் கடைசியுமாக பரோஸ் படம் தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், அந்த படம் எங்கெல்லாம் சொதப்பியது, எந்த விஷயமெல்லாம் சிறப்பாக இருந்தது என ப்ளூ சட்டை மாறன் கூறியவற்றை இங்கே காணலாம் வாங்க.
இந்த ஆண்டு இரட்டை தோல்வி: ஜல்லிக்கட்டு படத்தை இயக்கி ஆஸ்கர் ரேஸுக்கே அனுப்பிய இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் மோகன்லால் நடித்து இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ம் தேதி வெளியான மலைக்கோட்டை வாலிபன் படம் வசூல் ரீதியாக மண்ணைக் கவ்வியது. அந்த படத்திற்கு மோசமான விமர்சனங்களும் குவிந்தன. கங்குவா படத்திற்கு முன்பாகவே தர்ம அடி வாங்கிய படமாக மலைக்கோட்டை வாலிபன் மாறியது. இந்நிலையில், இன்னொரு மரண அடியாக தற்போது வெளியாகி இருக்கும் பரோஸ் திரைப்படம் அமைந்துள்ளது எனக் கூறுகின்றனர். மாயாஜால படங்களில் மோகன்லால் நடிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அடுத்து மீண்டும் த்ரிஷ்யம் 3 படத்தை கையில் எடுத்திருக்கிறார் மோகன்லால். மலையாள சினிமாவில் மம்மூட்டி நடித்த பிரமயுகம், மமிதா பைஜு நடித்த பிரேமலு, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் மற்றும் பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் உள்ளிட்ட பல படங்கள் இந்த ஆண்டு வெற்றிப் படங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

பரோஸ் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக நேற்று திரையரங்குகளில் வெளியான பரோஸ் திரைப்படத்திற்கு கேரளாவிலேயே மோசமான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை சுத்தமாக சரியில்லை என்றும் மைடியர் பூதம், அலாவுதினும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்கள் அப்பவே ரசிகர்களை கவர்ந்தன. ஆனால், அந்தளவுக்கு கூட சுவாரஸ்யமாக படத்தை மோகன்லால் இயக்கவில்லை எனக் கூறியுள்ளார். லிடியன் நாதஸ்வரத்தின் இசையும் சுமார் ரகம் தான் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தூங்காமல் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலே பெரிய விஷயம் என சோலியை முடித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் சொன்ன பாசிட்டிவ்: 3டி படங்கள் என சொல்லிக் கொண்டு 2டியில் எடுத்துவிட்டு கடைசி நேரத்தில் 3டி டச் கொடுத்து ஏமாற்றுவது போல ஏமாற்றாமல் நல்லாவே செலவு செய்து 3டி கேமராவிலேயே படத்தை எடுத்திருக்கிறார் மோகன்லால். விஷுவல்ஸ் எல்லாம் ஹாலிவுட் தரத்திற்கு இருந்தாலும் படத்தின் கதை ரொம்பவே வீக்காக உள்ளது தான் பிரச்சனை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











