Vettaiyan Blue Sattai Maran: ரஜினி ரசிகர்களுக்கே இந்த நிலைமைன்னா.. நம்ம கதி.. ப்ளூசட்டை மாறன் கலாய்!
சென்னை: ரஜினிகாந்தின் இண்டஸ்ட்ரி ஹிட்டான ஜெயிலர் படத்தையே கலாய்த்துத் தள்ளிய ப்ளூ சட்டை மாறன் தற்போது வேட்டையன் படத்தையும் வேட்டையாட ஆரம்பித்து விட்டார். விஜய் வந்து படத்தை பார்த்து விட்டு அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டதாக மீம் போட்ட ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக வேட்டையன் படத்துக்கு எதிரான நெகட்டிவ் ட்வீட்களை போட்டு வருகிறார்.
விஜய்யின் கோட் படத்தை சமீபத்தில் தனது விமர்சனத்தில் கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன் அடுத்து வேட்டையன் படத்தையும் கழுவி ஊற்ற ரெடியாகி விட்டார் என்பது அவர் பதிவிடும் ட்வீட்களை பார்த்தாலே தெரிகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என ட்வீட் போட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
விஜய் நிம்மதி: சென்னை தேவி தியேட்டரில் வேட்டையன் படம் FDFSபார்த்தார் விஜய்.
படம் முடிந்ததும் விஜய்... என வடிவேலு அப்பாடா என சொல்லி பெருமூச்சி விடும் போட்டோவை போட்டு ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறன் ட்வீட்களை விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சமூக வலைதள சண்டை போட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கே பிடிக்கல: "என்னதான் மொக்கை படமா இருந்தாலும்.. மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள் சூப்பர் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்களையே வெறுப்பேத்திட்டாங்க. பாவம். சூப்பர் ஸ்டார் பேர்ல டீ சர்ட் எல்லாம் போட்டுக்கிட்டு.. இவங்களுக்கே இந்த நிலமைன்னா.. பொதுமக்கள் கதி?" என தற்போது ட்வீட் ஒன்றை போட்டு வேட்டையன் படத்துக்கு வேட்டு வைக்க முயற்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்: வேட்டையன் படத்தை எப்படியாவது தோல்விப் படமாக அறிவித்து விட வேண்டும் என்று நேற்றில் இருந்தே விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் போராடி வருகின்றனர். சூர்யா ட்வீட் போட்டு வேட்டையன் படத்துக்கு ஆதரவு அளித்திருந்தார். விஜய் படத்தையே தேவி தியேட்டரில் பார்த்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால், ரசிகர்களின் இந்த தேவையற்ற சண்டை தான் ஏன் ஓயவில்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது.


Click it and Unblock the Notifications











