Blue Sattai Maran Review: சனிக்கிழமை தான் அடிப்பீங்க.. வியாழக்கிழமையே ஏன்?.. ப்ளூ சட்டை மாறன் கலாய்!

சென்னை: விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் நேற்று வெளியான சரிபோதா சனிவாரம் படத்திற்கான விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ளார். சனிக்கிழமையானால் தானே நாயகனுக்கு கோபம் வந்து அடிப்பார். வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்களை ஏன் இந்த பொள பொளக்கணும் எனக் கேட்டு படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

ஹீரோ ஏன் சனிக்கிழமை மட்டும் அடிக்கிறார் என்பதை சொல்லவே அரை மணி நேரம் வீணடித்தது தான் படத்திற்கு பெரிய மைனஸ் என்றும் எஸ்.ஜே. சூர்யா வந்த பின்னர் தான் படமே பிக்கப் ஆக ஆரம்பித்தது என உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளார்.

blue sattai maran nani

தெலுங்கு மசாலா கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையை கொஞ்சம் சரியாக வடிவமைக்காத நிலையில், இயக்குநர் வெற்றியை கோட்டை விட்டு விட்டார் என்றும் சூர்யாவின் சனிக்கிழமை படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா தான் காப்பாத்துறாரு: நானி படத்தின் ஹீரோவாக இருந்தாலும், நிஜமாகவே படம் ரசிகர்களுக்கு பிடிக்க ஆரம்பிப்பது எஸ்.ஜே. சூர்யாவை ஸ்க்ரீனில் காட்டிய பின்னர் தான். எஸ்.ஜே. சூர்யா மற்றும் முரளி ஷர்மா இடையே நடக்கும் காட்சிகளும் அந்த கதையும் ஹீரோ நானியின் கதையை விட சுவாரஸ்யமாக உள்ளது. அந்த காட்சிகள் மட்டும் இல்லையென்றால் படம் படுத்து விடும் என விமர்சித்துள்ளார்.

தேவையில்லாத ஆணி: நானியை ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டவும் அதிகமான கோபக்காரராகவும் காட்ட கொடுக்கப்படும் பில்டப்புகள் எல்லாம் படத்திற்கு தேவையில்லாத ஆணி. படத்தின் ஓட்டத்தோடே அந்த காட்சிகளை ரசிகர்களுக்கு எளிதில் புரிய வைத்திருக்கலாம். ஆனால், அதற்கான மெனக்கெட்ட அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதைக்கு இயக்குநர் செலவிடவில்லை என்று தான் தோன்றுகிறது என ப்ளூ சட்டை மாறன் வறுத்தெடுத்துள்ளார்.

blue sattai maran nani

முதல் நாள் வசூல்: இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ள சூர்யாவின் சாட்டர்டே படம் பட்டையை கிளப்புகிறது. முதல் நாளில் 8 முதல் 9 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் அந்த படம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் 100 கோடி வசூலை தொடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X