லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி?.. 300 கோடி வசூல் நாயகனை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இந்த ஆண்டும் ப்ளூ சட்டை மாறன் தனது வேலையை ஆரம்பத்திலேயே அதிரடியாக தொடங்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் பல பிரபலங்களுடன் சண்டைக்கு செல்வதையும் அவர்கள் குறித்து சோஷியல் மீடியாவில் விமர்சனங்களை முன்வைப்பதும் என ட்விட்டரில் ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இவர் சொல்லும் விமர்சனத்தை காணவும் அதற்கு கீழே இவரை திட்டித் தீர்க்கவும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு எஸ்கே ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

sivakarthikeyan blue sattai maran troll

சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது, தன்னை காலி செய்ய சோஷியல் மீடியாவில் ஒரு கூட்டமே காத்துக்கிடப்பதாக கூறிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார்.

புலம்பிய சிவகார்த்திகேயன்: தன்னுடைய படங்கள் நல்லா ஓடி கலெக்‌ஷன் அள்ளினாலும் அந்த கிரெடிட் தனக்கு கிடைப்பதில்லை என்றும் டான் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. அமரன் படம் 300 கோடி வசூல் செய்தும் சாய் பல்லவிக்குத்தான் நல்ல நடிகை என்கிற பாராட்டுக்கள் கிடைத்ததாக சிவகார்த்திகேயன் பேசிய நிலையில், அவர் புலம்புவது ஏன் என்கிற கேள்வியுடன் ட்வீட் ஒன்றை ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

லேசா கீறுனதுக்கே: "டான் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமரனில் சாய் பல்லவி நடிப்புதான் அப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது பலரின் கருத்து. அது உண்மையும் கூட..

பார்க்கிங் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், லப்பர் பந்தில் தினேஷ் நடிப்புதான் பெரிதாக பேசப்பட்டது.

அதற்காக ஹரீஷ் கல்யாண் நடிப்பை யாரும் குறை கூறவில்லை. நல்ல கதைகளை தேர்வு செய்கிறார் என அவரை பாராட்டவே செய்கிறார்கள.

அவரும் இப்படி பொதுவில் வந்து 'என்னை யாரும் பாராட்டல' என்று புலம்பவில்லை.

ஆகவே இப்படி சென்டிமென்ட் பிட்டெல்லாம் போடாமல்.. வாலி, பருத்தி வீரன், பிதாமகன், அசுரன் போன்று சிறந்த நடிப்பை தர முயலுங்கள். பாராட்டு தானாக வரும்.

ஒரே ஒரு அமரன் ஓடியதும்.. நீங்கதான் அடுத்த விஜய் என ஒரு க்ரூப் காமடி செய்தால்.. இன்னொரு க்ரூப் கலாய்க்கத்தான் சொய்யும்.

இதைவிட பல மடங்கு விமர்சனங்களை தாண்டித்தான் ரஜினி, கமல் அரை நூற்றாண்டு கடந்தும், விஜய், அஜித் கால் நூற்றாண்டு கடந்தும் இந்த இடத்தில் இருக்கிறார்கள்.

லேசா கீறுனதுக்கே.. இப்படி அழுதா எப்படி தம்பி?

நடிப்பை மேலும் இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க." என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார்.

எதிர்ப்பும் ஆதரவும்: அவரது ட்வீட்டுக்கு கீழ் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் சொல்வது சரிதான் என்றும் சிவகார்த்திகேயன் இன்னமும் தனது நடிப்பை வெளிக்காட்டும் விதமான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அமரன் படத்தில் ராணுவ வீரராக உருமாறி சிவகார்த்திகேயன் நல்ல நடிப்பைத் தான் கொடுத்திருந்தார் என்றும் குறை சொல்ல வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X