எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன்.. விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தை பங்கம் பண்ண ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இந்த வாரம் தமிழ் சினிமாவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இரண்டு படங்களிலும் ஆங்கில தலைப்புகளே நிரம்பி கிடந்தது வருத்தமாக உள்ளது என டியர் மற்றும் ரோமியோ படங்களை டைட்டிலை வைத்து வச்சு செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
தலைப்பை தாண்டி படமாக பார்த்தால் இரண்டு இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மோதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான டியர் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ என இரண்டு படங்கள் இந்த வாரம் வெளியாகின.

இரண்டு படங்களும் கடந்த மூன்று மாதங்களாக தமிழ் சினிமாவில் எப்படி மொக்கை படங்கள் வந்ததோ அதேபோன்ற படங்களாகவே இந்த வாரமும் வந்திருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.
ரோமியோ விமர்சனம்: மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து திருமணம் செய்து கொள்ள நினைக்கும் ஹீரோ விஜய் ஆண்டனி நடிகை மிருணாளினி ரவியை திருமணம் செய்து கொள்கிறார். சென்னைக்கு அழைத்து வரும் ஹீரோயின் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் அதற்காக விவாகரத்து செய்ய வேண்டும் என்கிறார். இதுக்கு அவர் கல்யாணமே செய்யாமல் இருந்திருக்கலாமே? என்று தான் கேட்கத் தூண்டுகிறது. மெயின் கதையை விட்டு விட்டு படம் வேறு ஒரு இடத்துக்கு பயணிக்கிறது. தேவையில்லாத தங்கச்சி கேரக்டர், போனில் இன்னொரு வாய்ஸாக தனது மனைவியிடம் விஜய் ஆண்டனியே பேசுவது எல்லாம் படத்திற்கு பலம் அல்ல பலவீனம் எனக் கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பு: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக மாறியதில் இருந்தே ஒரே மாதிரியான ஃபேஸ் எக்ஸ்பிரஷன்களையே எல்லா படத்துக்கும் கொடுத்து வருகிறார். அதைப்போல டயலாக் டெலிவரியும் அம்மாவிடம் பேசினாலும், காதலியிடம் பேசினாலும், மனைவியுடன் பேசினாலும் ஏன் வில்லனிடம் பேசினால் கூட ஒரே மாதிரியாக உள்ளது. அவர் படத்துக்கு எதிரியை அவர்தான் என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேண்டாத வேலை ஏன்?: விஜய் ஆண்டனி இந்த படத்தில் இசையமைக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலாக எடிட்டிங் அவர்தான் செய்துள்ளார். தன்னைவிட யாராவது நல்லா நடித்திருந்தால், அவரது காட்சியை தூக்கிவிட்டு இவரது முகத்தை க்ளோஸ் அப்பில் வைத்து எடிட் செய்து இருப்பதெல்லாம் மோசமான செயல் என ப்ளூ சட்டை மாறன் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ரசிக்கும் படி ஒரு பாடல் கூட இல்லை என்றும் மொத்த படமும் டல்லாக போகிறது என விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications