பாவம் விஜய்.. மொக்கை டெக்னாலஜி.. கோட் 3வது சிங்கிளால் அஜித் ஹேப்பி.. ப்ளூ சட்டை மாறன் கலாய்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'கோட்' படத்தில் ஏகப்பட்ட நடிகர்களை எல்லாம் நடிக்க வைத்து விஜயகாந்தை ஏஐ மூலம் உருவாக்கப் போவதாகவும், சிவகார்த்திகேயன் கேமியோ என்றும் பலே பில்டப் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த ஹைப்பையும் யுவன் சங்கர் ராஜா 3 பாடல்களை வெளியிட்டு முடித்து விட்டார் என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பமான மகன் விஜய் லுக் குறித்த ட்ரோல் ஒவ்வொரு முறையும் அவரை காட்டும் போதெல்லாம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

GOAT Blue Sattai Maran Vijay

டீ ஏஜிங் டெக்னாலஜி மூலம் விஜய்யை கொடூரமாக வெங்கட் பிரபு உருவாக்கியுள்ளார் என்றும் இந்த ஐடியாவே முதலில் தவறு என்றும் பார்க்கவே சகிக்கவில்லை என ரசிகர்களே பொங்கி வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு போகும் விஜய்: இனிமேல் இயக்குநர்கள் தன்னை வைத்து காமெடி தான் செய்யப் போகின்றனர் என்றும் முன்பை போல தரமான மாஸ் படங்கள் தனக்கு வராது என்றே நினைத்து விட்டாரா விஜய் என்று தெரியவில்லை. நைஸாக சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டு அரசியல் பக்கம் ஒதுங்க முடிவு செய்து விட்டார் என்று விஜய்யின் அரசியல் என்ட்ரியையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தொடரும் சொதப்பல்: விஜய் நடித்த பீஸ்ட் படம் சர்வதேச அளவில் ட்ரோல் மெட்டீரியல் ஆனது. அதன் பின்னர் விஜய் நடித்த வாரிசு பட்மும் அவருக்கு விமர்சன ரீதியாக கை கொடுக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 2ம் பாதி சொதப்பி விட்டது. இந்நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் விஜய்க்கு வெற்றியை கொடுக்குமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

பாவம் விஜய்: கோட் படத்தின் 3வது சிங்கிளான 'ஸ்பார்க்' பாடல் வெளியானதில் இருந்தே விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜாவை சந்தில் போட்டு பலரும் பொளந்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் மட்டும் சும்மா விடுவாரா, "பாவம் விஜய். மொக்கை டெக்னாலஜி." என ட்வீட் போட்டு தனது பங்குக்கு வெளுத்துள்ளார்.

GOAT Blue Sattai Maran Vijay

கையை கொடு சகல: இந்நேரம் அஜித் குமார் வெங்கட் பிரபுவுக்கு இப்படித்தான் கையை கொடு சகல என கை கொடுத்திருப்பார் என வடிவேலுவின் எபிக் மீமை போட்டும் கலாய்த்துள்ளார். கோட் படத்தின் டீ ஏஜிங்கிற்காக ஹாலிவுட் நிறுவனத்துடன் எல்லாம் ஒப்பந்தம் போட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை முன் கூட்டியே ஃபிக்ஸ் செய்ததன் விளைவு தான் இப்படியொரு மோசமான அவுட்புட்டா? என்றும் லியோ படத்துக்கு நேர்ந்ததை போலவே படம் வெளியான பின்னர் வெங்கட் பிரபு புலம்புவாரா எனக் கேட்கின்றனர்.

GOAT Blue Sattai Maran Vijay

குவியும் மீம்ஸ்: சோஷியல் மீடியா முழுவதும் 'கோட்' படத்தின் ஸ்பார்க் பாடல் குறித்தும் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் விஜய் லைஃப்பில் கன்னா பின்னாவென விளையாடி விட்டனர் என்றும் பல விதமான ட்ரோல் மீம்கள் குவிகின்றன. வர வர விஜய் பட அப்டேட்கள் எல்லாம் ஹேட்டர்களுக்கான செல்பிரேஷனாக மாறிவிடுகிறதே என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X