விஜய் ஆண்டனி டிஸ்சார்ஜ்.. அடுத்து விஜய் தேவரகொண்டா அட்மிட்டா?.. ப்ளூ சட்டை மாறன் வேட்டை ஆரம்பம்!
சென்னை: ரோமியோ படம் தொடர்பாக விஜய் ஆண்டனி மற்றும் ப்ளூ சட்டை மாறன் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் விஜய் ஆண்டனியை கலாய்த்து பல போஸ்ட்டுகளை போட்டு வந்தார். தற்போது விஜய் ஆண்டனியை டிஸ்சார்ஜ் செய்து விட்டு விஜய் தேவரகொண்டாவை ப்ளூ சட்டை மாறன் அட்மிட் செய்திருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு சினிமாவும் தொடர்ந்து படு மொக்கையான பல படங்களை கொடுத்து வருகிறது. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தை போல விஜய் தேவரகொண்டா நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படமும் வெளியாகி ஃபிளாப் ஆனது.

வெறும் 20 கோடி கூட வசூல் வராத நிலையில், விஜய் தேவரகொண்டா செம கடுப்பில் உள்ள நிலையில், ஓடிடியில் வெளியான அந்த படத்தை நெட்டிசன்கள் போட்டு பொளந்து வருவதாக ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கில்லி தான் கிங்கு: "நேற்றைய பாக்ஸ் ஆபீஸ்: இயக்குனர் ஹரியின் முந்தைய படங்களின் ஸ்மெல் ரத்னத்தில் ஹெவியாக இருந்ததால் ரசிகர்கள் கடும் காண்டு. கில்லி அதிரடி வசூல். சனி, ஞாயிறு நாட்களிலும் கில்லிதான் வின்னர். அடுத்த விஜய் ஆண்டனி, விஷால் படங்கள் வரும்போது துப்பாக்கி, கத்தி போன்ற சூப்பர் ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல். அதனை டாக்கில் செய்ய.. பிச்சைக்காரன், சண்டைக்கோழிகளை இறக்க பாதிக்கப்பட்ட முகாம் தீவிர ஆலோசனை. புதிய மொக்கை படங்களை பார்ப்பதை விட.. பழைய நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆறுதல்." என ட்வீட் போட்டு விஷால் மற்றும் விஜய் ஆண்டனியை வெளுத்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

விஜய் தேவரகொண்டாவையும் விடல: தமிழ் சினிமா நடிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு திரையுலக நடிகர்களையும் விட்டு வைக்காமல் ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். பவுடர் போட்டு பொட்டு வச்சா அது இன்னொரு ஹீரோயின் என மகேஷ் பாபுவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய் தேவரகொண்டாவையும் விட்டு வைக்கவில்லை.
சிக்கிய ஃபேமிலி ஸ்டார்: "விஜய் தேவரகொண்டா நடித்த #FamilyStar சமீபத்தில் ott-ல் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ள வசனத்திற்கு இணையதளத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெண்களைக் கொச்சைப்படுத்தி, rape threats ஆதரிக்கும் வகையில் இவ்வசனங்கள் உள்ளன என்று விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குனர் பரசுராம் மேல கடும் அதிருப்தி எழுந்துள்ளது." என ட்வீட் போட்டு விஜய் தேவரகொண்டாவையும் வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
என்ன பஞ்சாயத்து: ஃபேமிலி ஸ்டார் படம் வந்தபோது கூட அந்த படத்தை பற்றிய விவாதம் நடைபெறவில்லை. பலரும் படத்தை பார்த்தால் தானே. அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ் டப்பிங்கில் வெளியான அந்த படத்தை பார்த்த பலரும், கடன் கொடுத்த நபர் அண்ணியை தப்பா பேசிட்டான்னு அவனுடைய இடத்துக்கு ஒட்டுமொத்த குடும்பத்தையும் குழந்தைகள் உட்பட அழைத்துச் சென்று பாடம் எடுக்கிறேன் என சொல்லிவிட்டு கடன் கொடுத்தவரின் அடியாட்களை அடித்துப் போட்டு விட்டு கடைசியாக விஜய் தேவரகொண்டா சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை.. இதுக்கு மேல இப்படி பண்ணா, எங்க வீட்லையும் ஆம்பளைங்க இருக்காங்க, உங்க வீட்லையும் பொம்பளைங்க இருக்காங்கன்னு.. இதுக்கு அந்த வில்லனே பரவாயில்லை என்று தான் தற்போது விஜய் தேவரகொண்டாவை பலரும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











