Vijay: சிஎம் சீட் விஜய்க்காக காத்திருக்கிறதா?.. பரபரப்பு போஸ்டர்.. பற்ற வைத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தலைவர்களுடன் தனது புகைப்படத்தை இணைத்து போஸ்டர்களை ஒட்டக் கூடாது என நடிகர் விஜய் அறிவுறுத்தினாலும், "போஸ்டர் அடி அண்ணன் ரெடி"னு விஜய்யே பாடிட்டாரே என ரசிகர்கள் போஸ்டர்களை பயங்கரமாக அடிக்க ஆரம்பித்துள்ளனர்.
மதுரை விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு முடிவுடனே போஸ்டர்களை அடித்து வரும் நிலையில், தற்போது வெளியிடப்பட்ட நாளைய முதல்வரே போஸ்டரை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

லியோ படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் மற்ற பிரச்சனைகளை விட்டு விட்டு இந்த பக்கம் வந்து விட்டாரே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இனிமேல் லியோ தான்: லியோ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் கொண்டாட்டத்துக்கு சிறப்பு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதில் தொடங்கி காவிரி விவகாரத்தை விட்டு விட்டு அடுத்து லியோ பக்கம் தாவி விட்டார் ப்ளூ சட்டை மாறன் என விஜய் ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தாலும், ஜெயிலர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் விஜய் ரசிகர்கள் ஆதரவை பெற போட்ட ட்வீட்களை பார்த்து ஏமாந்து போயிட்டோமே என சில ரசிகர்கள் தற்போது ப்ளூ சட்டை மாறனை திட்டத் தொடங்கி உள்ளனர்.
லியோ கெட்ட வார்த்தைகள்: லியோ படத்தில் ஆபாசமான வசனங்களை அதிகமாக லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார் என்றும் விஜய் அதெல்லாம் கண்டுக் கொள்ளாமல் காசுக்காக நடித்துள்ளார் என ஃபேக்காக உலாவி வரும் சென்சார் சர்டிபிகேட்டை வைத்து அதில் இடம்பெற்ற வார்த்தைகளை ட்வீட்டாக போட்டு அலப்பறையை கிளப்பி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
போதைப்பொருள் குடோன்: மேலும், லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் போதைப்பொருள் குடோனாகவே உள்ளனர் என்றும் இளைஞர்களை அதிகம் கெடுக்கும் விஷயங்களை தனது படத்தில் தொடர்ந்து காட்டி சமூகத்தையும் நாளைய தலைமுறையையும் விஜய் கெடுத்து வருகிறார் என ப்ளூ சட்டை மாறன் அடித்து நொறுக்க ஆரம்பித்துள்ளார்.
சிஎம் போஸ்ட் வெயிட்டிங்கா?: அதை விட உச்சமாக விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் நடிகர் விஜய்யை நாளைய முதல்வராக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து போஸ்டர்களை அடித்து வருகின்றனர். ஒரு பக்கம் எம்ஜிஆர், ஒரு பக்கம் அண்ணாவை வைத்து அடுத்த சிஎம் நீங்க தான் விஜய் என சொல்வது போல போஸ்டர் அடித்திருப்பதையும் தற்போது ஷேர் செய்து நடிகர் விஜய்யை டார்கெட் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











