சவப்பெட்டிக்கு மேலே ஆட்சி.. மோஷன் போஸ்டரிலேயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. தெறிக்கவிடும் ஆன்டி இண்டியன்

சென்னை: ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் படத்தின் மோஷன் போஸ்டர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

மோஷன் போஸ்டரிலேயே ப்ளூ சட்டை மாறனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இடம்பெற்று இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்டுள்ள இந்த படத்தை ஒடிடியிலாவது வெளியிடுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை

ப்ளூ சட்டை

தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனல் மூலம் சினிமா விமர்சனங்களை செய்து வருபவர் இளமாறன். ப்ளூ கலர் சட்டையை மட்டுமே அணிந்து விமர்சனம் செய்து வருவதால், அவரை ரசிகர்கள் ப்ளூ சட்டை என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர். ஹேட்டர்களும் ப்ளூ சட்டை என்றே திட்டி வருகின்றனர்.

சும்மா கிழி

சும்மா கிழி

கமர்ஷியல் படங்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீசானால் போதும் சும்மா கிழி கிழியென கிழித்துத் தொங்கவிட்டு விடுவார். ஜால்ரா அடிக்கும் சில விமர்சகர்களுக்கு மத்தியில் சினிமா துறையை பகைத்துக் கொண்டு கழுவி ஊற்றும் இவருக்கு ரசிகர்களும் ஹேட்டர்களும் அதிக அளவிலேயே உள்ளனர்.

இயக்குநராக அறிமுகம்

இயக்குநராக அறிமுகம்

வெறுமனே சினிமா படங்களை விமர்சிக்க மட்டுமே மீடியாவுக்கு வரவில்லை என்றும், இயக்குநராகும் தனது ஆசையை நிறைவேற்ற போராடி வருகிறேன் என்பதையும் ரசிகர்களுக்கு கூறும் வகையில் ஆன்டி இண்டியன் எனும் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

தணிக்கைக் குழு தடை

தணிக்கைக் குழு தடை

சினிமா படங்களை கழுவி ஊற்றி வந்த ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என முற்றிலுமாக தடை செய்துள்ளது. படத்தில் மத்திய, மாநில அரசுகளின் அரசியலை நக்கலடித்து ஏகப்பட்ட காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்று இருப்பதால் தான் இந்த தடை என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் மாறன்.

மோஷன் போஸ்டர் ரிலீஸ்

மோஷன் போஸ்டர் ரிலீஸ்

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்போது ஆன்டி இண்டியன் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். மோஷன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அதனை கழுவி ஊற்றாமல், இந்த படத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்கு, ஒடிடியிலாவது ரிலீஸ் பண்ணிடுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இறுதி ஊர்வலம்

இறுதி ஊர்வலம்

மோஷன் போஸ்டர் ஆரம்பத்திலேயே இலுஸ்ட்ரேட்டர் இமேஜில் இறுதி ஊர்வலம் போகிறது. அதனை தொடர்ந்து இந்து, முஸ்லிம், கிறித்துவ மக்களை காட்டியுள்ளார். ஆரம்பத்திலேயே சங்கும் பாடையையும் காட்டிட்டீங்களே ப்ளூ சட்டை என ரசிகர்கள் விசில் அடிக்காத குறையாக பாராட்டி வருகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இப்படியொரு மோஷன் போஸ்டரை இதுவரை பார்த்ததில்லை என்றும் மோஷன் போஸ்டரில் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை காட்டிய முதல் ஆள் ப்ளூ சட்டை மாறனாகத் தான் இருப்பார். நிச்சயம் படத்தில் அரசியல் நய்யாண்டி அதிகளவில் இருக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Recommended Video

Vijay's Cycle மாடல் மற்றும் விலை என்ன? | Blue sattai Maran இயக்கிய படத்துக்கு தடை? |Filmibeat Tamil
சவப்பெட்டி மேலே ஆட்சி

சவப்பெட்டி மேலே ஆட்சி

இறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என அரசியல் வாதிகள் சொல்ல, அப்போ சரக்கும் சைடிஷும் ஓடாதா என நக்கல் வாய்ஸ் ஓவருடன் மோஷன் போஸ்டர் முடிகிறது. சவப்பெட்டிக்கு மேலே ஆட்சிக் கட்டில் போடப்பட்டு குரங்குகள் ஆட்சி நடத்துவதாக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காவி கலரு

காவி கலரு

மேலும், மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் விதமாக டைட்டிலிலேயே ஆன்டி இண்டியன் என பன்ச் வைத்துள்ள ப்ளூ சட்டை மாறன் காவி கலரு துண்டையும் வெளிப்படையாக காட்டி வம்பிழுத்துள்ளார். இதன் காரணமாகத்தான் ஆன்டி இண்டியன் படத்திற்கு தணிக்கைக் குழு சான்று அளிக்கவில்லை என்கிற பேச்சுக்களும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X