ப்ளு சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் படத்தில் 38 இடங்களில் கத்தரி.. ரிவைஸிங் கமிட்டி பரிந்துரை!

சென்னை: ப்ளு சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆன்டி இந்தியன் படத்தில் 38 இடங்களில் மாற்றம் செய்ய ரிவைஸிங் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

Recommended Video

அரசியல்வாதிகளை காப்பாற்ற துடிக்கும் censor board | Producer Adham Bava Chat p-01 | Filmibeat Tamil

பிரபல யூட்யூப் திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது அதிரடி விமர்சனங்களால் பிரபலமானவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தான் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

ஆன்டி இந்தியன் எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் தானே செய்து முடித்துள்ளார்.

அரசியல் படம்

அரசியல் படம்

இந்தப் படத்தில் நரேன், ராதா ரவி உள்ளிட்டோருடன் நிறைய புதுமுகங்களும் நடித்துள்ளனர். ஆதம்பாவா தயாரித்துள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

சவப்பெட்டி மீது ஆட்சி

சவப்பெட்டி மீது ஆட்சி

ஆனால் ஆன்டி இந்தியன் படத்துக்கு சென்சார் குழுவினர் தடை விதித்துள்ளனர். சவப்பெட்டி மீது ஆட்சி செய்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் கட்சிகளையும் படத்தில் சாடியுள்ளதாக தெரிகிறது.

ரிவைஸிங் கமிட்டி

ரிவைஸிங் கமிட்டி

இதனால் ஆன்டி இந்தியன் படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்த சென்சார்போர்டு படத்திற்கு தடை விதித்தது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இதனை தொடர்ந்து ரிவைஸிங் கமிட்டி முன் படத்தைத் திரையிட படக்குழு முடிவு செய்தது.

படத்திற்கு பாராட்டு

படத்திற்கு பாராட்டு

கன்னட சினிமா இயக்குநரான நாகபாரன உட்பட 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு சமீபத்தில் பெங்களூருவில் படத்தைப் பார்த்தது. அவர்கள் அனைவரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தலைப்பில் மாற்றம்

தலைப்பில் மாற்றம்

இருப்பினும், படக்குழு எந்த பிரச்சனையும் இல்லாமல் படத்தை வெளியிடுவதற்காக சில காட்சிகளையும் உரையாடல்களையும் அகற்றுமாறு அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அவர்களின் பரிந்துரையில் படத்தின் தலைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீக்க பரிந்துரை

நீக்க பரிந்துரை

மேலும் படத்தில் ஒரு நடிகராகவும், ஒரு தேசிய அமைப்பின் அரசியல்வாதியாகவும் சித்தரிக்கப்படும் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு அரசியல் கட்சிகள் பற்றிய குறிப்புகளை நீக்குமாறும் படக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல வெட்டுகள்

பல வெட்டுகள்

படக்குழுவினர் தங்களின் 38 பரிந்துரைகளில் மாற்றங்களைச் செய்ய ஒப்புக் கொண்டால், படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்க தயாராக இருப்பதாக ரிவைஸிங் கமிட்டி தெரிவித்துள்ளது. உட்டா பஞ்சாப் மற்றும் பத்மாவத் படங்களுக்குப் பிறகு, ரிவைஸிங் கமிட்டியிலிருந்து பல வெட்டுக்களை எதிர்கொண்ட படம் ஆன்டி இந்தியன் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: blue sattai maran
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X