புளூசட்டை மாறனின் ஆன்டி இண்டியன்… ரிலீஸ் தேதி மாற்றம் !
சென்னை : புளூசட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஆன்டி இண்தியன் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், ராதாரவி, புளுசட்டை மாறன், ஆடுகளம் நரேன், வாழ்க்கை என் முத்துராமன், விஜய் டிவி பாலா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

புளுசட்டை மாறன்
சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டைமாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் ஆன்டி இண்டியன் திரைப்படம். இத்திரைப்படத்தை ஆதம் பாவா தயாரித்துள்ளார்.

நிராகரித்தது
ஆன்டி இந்தியன் படத்தை பார்த்த தணிக்கை குழு இப்படத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாது பல வசனங்கள் மற்றும் காட்சிகள் உள்ளதால் அவற்றை நீக்க வேண்டும் என்று கூறி படத்தை முழுமையாக நிராகரித்தது.

யு / ஏ தணிக்கைச் சான்றிதழ்
அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி படத்தை பார்த்துவிட்டு, படத்தில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது ம்யூட் செய்யவேண்டும். குறிப்பாக ஆன்டி இண்டியன் எனும் டைட்டிலை மாற்றவேண்டும் என கூறி படத்திற்கு 38 கட்டுகள் போடப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தை நாடி எந்தவித கட்'டும் இல்லாமல் யு / ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றார் இயக்குனர் ப்ளூ சட்டை மாறன்.

தள்ளிவைப்பு
இந்நிலையில், ஆன்டி இண்தியன் திரைப்படம் டிசம்பர் 3ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஆதம் பாவா தெரிவித்துள்ளார். ஆன்டி இன்டியன் டிசம்பர் 3ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்து இருந்தோம். டிசம்பர் முதல் வாரத்தில் மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாலும், 3ந் தேதி பிரபல நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளதாலும் படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 10ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதாக தெரிவித்தார்.

கணிசமான திரையரங்குகளில்
இப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்கனவே நீண்ட நாட்கள் காத்திருந்து விட்டோம், இன்னும் ஒரு வாரம் காத்திருந்தாலும் பரவாயில்லை, படம் கணிசமான திரையரங்குகளில் வெளியானால்தான் அதிகமான மக்களைச் சென்றடையும் என்பதால் நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.


Click it and Unblock the Notifications











