அஜித் ரசிகர்கள் கொண்டாடும் பீஸ்ட்... ப்ளூ சட்டை மாறன் சொன்ன வேற லெவல் கமெண்ட்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது பீஸ்ட். இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்து உள்ள போதிலும் எந்த வகையிலும் படம் விஜய்யின் மாசை காட்டும் வகையில் அமையவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது பீஸ்ட். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கமெண்ட்ஸ் எழுந்துள்ளது.

தாக்கத்தை ஏற்படுத்தாத பீஸ்ட்
முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அஜித்தின் வலிமை படங்கள் ரிலீசாகி கலவையான விமர்சனங்களையே பெற்றன. இந்நிலையில் அந்தப் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக்கூட பீஸ்ட் கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சொதப்பலான திரைக்கதை
விஜய்யின் புலி உள்ளிட்ட படங்களை போல இந்தப் படமும் மிகவும் சொதப்பலான திரைக்கதையுடன் வெளிவந்துள்ளதாக கமெண்ட்ஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் திரைக்கதைதான் சிறப்பாக இல்லை, குறைந்தபட்சம் காட்சி அமைப்புகளிலாவது வித்தியாசத்தை காட்டாமல் நெல்சன் சாதாரண கதையை சாதாரண காட்சிகளுடன் எடுத்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடத்தல் கதை
முந்தையப் படங்களில் எடுத்துக் கொண்ட அதே கடத்தலை எடுத்துக் கொண்டுள்ளார் நெல்சன். ஆனால் அந்தப் படங்களில் இருந்த திரைக்கதை இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இந்நிலையில் வலிமை படத்தை விஜய் ரசிகர்கள் விமர்சித்த நிலையில், தற்போது அஜித் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
இந்நிலையில் இதே கருத்து பிரபல விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறனும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தான் படத்திற்கு சென்ற விஜய் ரசிகரும் தனது நண்பருமான ஒருவரிடம் படம் குறித்து கேட்டதாகவும் அவர் அதற்கு திரையரங்கில் விசில் சத்தம் காதை கிழிப்பது கேட்கவில்லையா என்று பதிலுக்கு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
இதையடுத்து பீஸ்ட் படம் அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளதா என்று தான் கேட்டதாகவும், அதற்கு அவர் ஏன் வயிற்றெரிச்சலை கிளப்புகிறீர்கள், படத்தை அஜித் ரசிகர்கள் கலாய்த்தபடி கொண்டாடி வருவதாக அவர் பதிலளித்ததாகவும் ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஷாப்பிங் மால் செல்பவர்கள் கொண்டாடும் படம்
அவரின் இந்த கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே பீஸ்ட் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை தொடர்ந்து கொடுத்துவரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த கமெண்ட்டை தெரிவித்துள்ளார். மேலும் ஷாப்பிங் மால் செல்பவர்கள் கொண்டாடும் படம் என்றும் மீம்ஸ் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











