ஓஹோ இதுதான் வஞ்சப்புகழ்ச்சியா?.. விஜய் படத் தயாரிப்பாளரை வாழ்த்திய ப்ளூ சட்டை மாறனின் உள்குத்து!

சென்னை: ராம நாராயணன் படங்களுக்கு ஒரு காலத்தில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டமும் மகளிர் கூட்டமும் இருந்தன. 1985ம் ஆண்டு ராம நாராயணன் திரைக்கதை எழுதி படம் தயாரிக்க சோழ ராஜன் இயக்கிய நாகம் படம் வெளியானது. வீரன் வேலுதம்பி, சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி என காமெடி படங்களை தயாரித்து வந்த ராம நாராயணன் ஆடி வெள்ளி படத்தை இயக்கி தயாரித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

ஸ்ரீ தேண்டாண்டாள் மூவிஸ் தயாரிப்பில் வெளியான துர்கா, செந்தூர தேவி, மாயா, பாளையத்து அம்மன், நாகேஸ்வரி, கோட்டை மாரியம்மன், அன்னை காளிகாம்பாள் என ஏகப்பட்ட ஆன்மிக படங்கள் வெளியாகி தியேட்டர்களில் பெண்களை சாமி வந்து ஆட வைத்தன.

vijay blue sattai maran mr house keeping


பக்தி படங்களுக்கு இணையாக காமெடி படங்களையும் குறைந்த செலவில் எடுத்து வந்த தேனாண்டாள் நிறுவனம் தளபதி விஜய்யை வைத்து அட்லீ தயாரிப்பில் பிரம்மாண்டமாக மெர்சல் படத்தை எடுத்த நிலையில், ஓவர் பட்ஜெட்டால் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்தன. மேலும், அடுத்து எந்தவொரு படத்தையும் தயாரிக்காமல் 8 ஆண்டுகள் கழித்து ஹரி பாஸ்கர் படத்தை வெளியிடும் அந்த நிறுவனம் வெற்றி பெறட்டும் என ப்ளூ சட்டை மாறன் உள்குத்துடன் விஜய்யை தாக்கி போட்டுள்ள ட்வீட் தற்போது தளபதி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்க்கு முட்டு: ப்ளூ சட்டை மாறன் கடந்த சில நாட்களாகவே விஜய்க்கு முட்டுக் கொடுத்து வருகிறார் என்றும் இவரும் விஜய்யின் மாஃபியாவில் இணைந்துவிட்டார் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். திடீரென பெரியார் பிரச்சனையில் திமுக பக்கம் ஆதரவாக கருத்துக்களை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது விஜய்யை தாக்கி ட்வீட்களை அவர் பதிவிட ஆரம்பித்துவிட்டார் என்று தளபதி ரசிகர்கள் அவரை திட்ட ஆரம்பித்துள்ளனர்.

மெர்சல் படத்திற்கு பிறகு: அம்மன் படங்களை இயக்கியும் தயாரித்தும் ராம நாராயணன் உருவாக்கிய தேனாண்டாள் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மகன் முரளி ராமசாமி மற்றும் மனைவி ஹேமா ருக்மணி இணைந்து TSL என தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை எல்லாம் சுருக்கி 2017ம் ஆண்டு மெர்சல் படத்தை தயாரித்து வெளியிட்டனர். மேலும், அந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தனர். ஆனால், அட்லீ செய்த ஓவர் செலவு காரணமாக தயாரிப்பு நிறுவனத்துக்கு பல கோடி நஷ்டம் தான் ஏற்பட்டது என்றும் மெர்சல் படத்துக்கு பிறகு சுமார் 8 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் அந்த நிறுவனம் தயாரிக்காமல் இருந்ததாகவும் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு பாபி சிம்ஹா நடித்த வல்லவனுக்கும் வல்லவன் என்கிற படத்தையும் அந்த நிறுவனம் தயாரித்தது. ஆனால், அந்த படமும் ஓடவில்லை.


ஹரி பாஸ்கர் படம்: இந்நிலையில், குறைந்த பட்ஜெட்டில் ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரி பாஸ்கர் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான லாஸ்லியா, ரயான் நடித்துள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ”8 ஆண்டுகளுக்குப் பிறகு, Actor #Vijay அவர்களின் #Mersal தயாரித்த #thenandalfilms, தனது அடுத்த படமான “MrHouseKeeping”, ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்! ” என உள்குத்துடன் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். மாஸ்டர் படத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ, வாரிசு படத்தின் மூலம் தில் ராஜு என தொடர்ந்து பலரும் விஜய் படங்களை தயாரித்து நஷ்டத்தை தான் சந்தித்தார்கள் என்று அஜித் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X