அமீர்கானுக்கே படம் ஓடல.. கூலி படமும் காலி?.. அட்வான்ஸ் புக்கிங்கில் கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வசூல் ரீதியாக கோட் படத்தை முந்தவில்லை என்றும் படத்தின் இரண்டாம் பாதி சொதப்பல் என்றும் சொல்லி வரும் ப்ளூ சட்டை மாறன் அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படம் குறித்தும் இப்பவே கணிக்கத் தொடங்கி விட்டார்.
பப்ளிக் ரிவ்யூவில் ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் படத்துக்கு சொன்ன நெகட்டிவ் விமர்சனம் குறித்து யூடியூப் சேனல்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே சொல்லி உயிர் வாழ்கிறார் என்றும் தமிழ் படங்களை கொண்டாடாமல் மற்ற மொழி படங்களை கொண்டாடுவது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கூலி படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமீர்கான் இந்த படத்தில் நடிக்கப்போவது உறுதியாகி உள்ளது. அந்த தகவல் அறிந்ததுமே அமீர்கானையும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் விமர்சனம்: ரஜினிகாந்தையே வேறொரு நல்ல போலீஸ் அதிகாரியை வைத்து என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். ஆனால், கடைசியில் அவர் அமிதாப் பச்சனை வைத்துக் கொண்டு பாடம் நடத்தி வருகிறார் என்று வேட்டையன் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, பலாத்கார கதை வேணுமா அதுவும் இருக்கு, கஞ்சா கதை வேண்டுமா அதுவும் இருக்கு, கார்ப்பரேட் முதலாளி கதை வேணுமா அதுவும் இருக்கு, போலீஸ் கதை வேண்டுமா என ஒரே படத்தில் பல விஷயங்களை ஞானவேல் திணித்துள்ளார் என்றும் ப்ளூ சட்டை மாறன் இந்த படம் கன்டென்ட் படமே கிடையாது என்றும் கலவை சாத படம் என விமர்சித்தது ரசிகர்களை உச்சகட்ட டென்ஷனில் ஆழ்த்தியுள்ளது.
அமீர்கான் தலைவரை காப்பாற்றுவாரா?: ”அமிதாப்பால் வேட்டையனை காப்பாற்ற முடியவில்லை. இப்போது கூலியில் அமீர்கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுல என்ன தொழில் ரகசியம்னா.. அமீர்கான் கடைசியா ஹீரோவா நடிச்ச Thugs of Hindostan, Lal Singh Chadda..ரெண்டுமே அட்டர் ஃப்ளாப். இவராவது தலைவரை காப்பாற்றுவாரா?” என அமீர்கானையும் சேர்த்து ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அட்வான்ஸ் புக்கிங்கில் நெகட்டிவிட்டி: ஒரு படம் வெளியான பின்னர் அந்த படத்தை பார்த்து விட்டு இதில் பாசிட்டிவ் என்ன இருக்கிறது, மைனஸ் என்ன இருக்கிறது என்பதை சொல்லலாம். ஆனால், ஒரு படம் இன்னும் எடுத்து முடிக்காத முன்பாகவே அந்த படம் ஓடாது என்றும் அந்த படம் உருப்படாது என்றும் சொல்வது சரியான விமர்சனம் அல்ல என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஷாருக்கான் கம்பேக் கொடுக்கலையா?: ஷாருக்கான் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், சில ஆண்டுகள் பிரேக் விட்டு மீண்டும் வந்து பதான், ஜவான், டன்கி என ஹாட்ரிக் வெற்றியை பெறவில்லையா? அமீர்கானும் அதே போல கம்பேக் கொடுப்பார் என்றும் கூலி படத்தில் அவர் நடிப்பது உறுதியானால் நிச்சயம் பான் இந்தியா அளவில் கூலி படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி படமாக அமையும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











