பாலகிருஷ்ணாவுக்கு பம்பர் ஃப்ளாப்.. அகண்டா 2 இத்தனை கோடி நஷ்டமா?.. ப்ளூ சட்டை மாறன் தாக்கு!
சென்னை: பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா 2 திரைப்படம் அதன் முதல் பாகம் அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் குவிந்த நிலையில், வசூலும் அதன் முதல் பாகத்தை போல இல்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது.
கடவுளையும் இந்து தர்மத்தையும் காட்டிவிட்டால் படம் கல்லா கட்டிவிடும் என தொடர்ந்து தெலுங்கில் இந்த ஆண்டு 3 படங்கள் வந்து பல்பு வாங்கியது தான் மிச்சம் என்கின்றனர். பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு, விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா மற்றும் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 உள்ளிட்ட படங்களை தெலுங்கு ரசிகர்களும், இந்தி ரசிகர்களும் பெரிதாக கண்டுக்கொள்ளவே இல்லை.

அதற்கு காரணம் சரியான திரைக்கதை மற்றும் மேக்கிங் இல்லாமல், வெறுமனே பில்டப் மற்றும் புரொமோஷன் செய்து ஏமாற்றப் பார்த்தது தான் என்கின்றனர்.
பம்பர் ஃப்ளாப்: போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அகண்டா 2 திரைப்படம் கதை மற்றும் திரைக்கதையை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் வெறும் பாலகிருஷ்ணாவின் பில்டப்புகளை மட்டுமே வைத்து ஓட்டிவிடலாம் என நினைத்த நிலையில், பயங்கர பம்பர் ஃப்ளாப் ஆகிவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு பொளந்துக் கட்டியுள்ளார்.
இத்தனை கோடி நஷ்டமா?: அகண்டா 2 திரைப்படம் இதுவரை 83 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்துள்ளது. தியேட்டர் ஷேர் 100 கோடி வந்தால் தான் படம் லாபம் என்கிற இலக்கை அடையும் என்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்தமாக இதுவரை 47 கோடி தான் ஷேர் வந்துள்ளது என்றும் அகண்டா 2 திரைப்படம் பாலகிருஷ்ணாவுக்கு பம்பர் ஃப்ளாப் என ப்ளூ சட்டை மாறன் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அகண்டா சீரிஸ் தொடரும்: படம் வெளியான மறுநாளே மிகப்பெரிய வெற்றிப் படம் என வெற்றி விழாவையே பாலகிருஷ்ணா நடத்திவிட்டார். சமீபத்தில், பேட்டியளித்த இயக்குநர், அவெஞ்சர்ஸ் சீரிஸ் மாதிரி அகண்டா சீரிஸ் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்றும் சனாதன தர்மத்தை தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டே இருப்போம் எனக் கூறியுள்ளார். பாலகிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டு வெளியான டாக்கு மகாராஜ் திரைப்படம் 150 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











