அயலான், கேப்டன் மில்லர் வசூல் எல்லாம் பொய்யா?.. என்ன ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை நாட்களை பயன்படுத்தி வசூல் ஈட்டி வரும் நிலையில், அது தொடர்பாக வெளியான வசூல் அறிவிப்புகள் எல்லாம் பொய் என்பது போல ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்களின் வசூலையே வடை சுடுறாங்க என கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் இந்த பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே அருண் விஜய்யின் மிஷன் பார்ட் 1 படம் மட்டுமே நல்லா இருக்கு என்றும் மற்ற படங்கள் எல்லாம் ஃபிளாப் என கூறி வருகிறார்.

கேப்டன் மில்லர் வசூல்: கேப்டன் மில்லர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் லைகா வெளியீடு காரணமாக அதிக தியேட்டர்களில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருவதாகவும் பொங்கல் வின்னர் நாங்க தான் என்றும் பிளாக்பஸ்டர் என சத்யஜோதி தொடர்ந்து வித விதமான போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை முதல் நாள் வசூல் முதல் எந்தவொரு வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
மனோபாலா விஜயபாலன் கணிப்பு: கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒட்டுமொத்தமாக 70 கோடி வசூலை ஈட்டி விட்டதாக மனோபாலா விஜயபாலன் போட்ட பதிவு பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது. தயாரிப்பு நிறுவனமும் அவரது ட்வீட்டை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: கேப்டன் மில்லர் 70 கோடி வசூலை ஈட்டியதாக வெளியான செய்தியை பார்த்த ப்ளூ சட்டை மாறன் "உருட்டு உருட்டு" என கலாய்த்துள்ளார். கேப்டன் மில்லர் படம் கதையே சரியாக இல்லை என்றும் குற்றாலத்திற்கு போய் விட்டு குழாய் தண்ணீரில் குளித்தது போலத்தான் படம் இருந்தது என பங்கம் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில், பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் அந்தளவுக்கு ஓடலை என்றே கூறி வருகிறார்.

அயலானுக்கு அசிங்கமான கமெண்ட்: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தையும் தனது விமர்சனத்தில் கழுவி ஊற்றியிருந்தார் ப்ளூ சட்டை மாறன். மேலும், தனிப்பட்ட முறையிலும் சிவகார்த்திகேயனை அயலான் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை வைத்தும் தாக்கி ட்வீட் போட்டிருந்தார். தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும் கண்ணியமா இருந்தா நீ வேறலெவல் என்கிற வரிகளை எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு வைக்கலாமா? என இமான் விவகாரத்தை வைத்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், அயலான் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நம்ப மாட்டேன் என கெட்ட வார்த்தையை போட்டு பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

60 கோடி வசூல்: அயலான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 50 கோடியை கடந்து விட்டதாக இரு தினங்களுக்கு முன்னதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நிலையில், தற்போது 60 கோடிக்கும் அதிகமாக வசூல் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











