பாலய்யாவை பாலா இயக்கணும்.. ப்ளூ சட்டை மாறன் ஆசையை பாருங்க.. எல்லாம் எதுக்கு தெரியுமா?

சென்னை: இயக்குநர் பாலா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவை இயக்க வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் புதிதாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். இப்படியொரு ட்வீட் போட காரணமே மலையாள திரையுலகின் இளம் நடிகை மமிதா பைஜுவின் சமீபத்திய பேட்டி க்ளிப் டிரெண்டானது தான்.

இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக மமிதா பைஜு பகீர் கிளப்பினார் என பற்றிக் கொண்ட தீ பரவிய நிலையில், இயக்குநர் பாலா தெலுங்கு நடிகர் பாலய்யாவை இயக்கினால் எல்லாம் சரியாகி விடும் என்கின்றனர்.

Blue Sattai Maran says Director Bala will direct Balakrishna after Mamitha Baiju controversy arise

அப்படி ஏன் சொல்கின்றனர் என்றால், சூட்டிங் ஸ்பாட்டில் பலரையும் பாலய்யா தான் போட்டு அடிப்பார் என்றும் பாலா அவரை இயக்க சென்றால் பாலாவுக்கு அடி கன்ஃபார்ம் என கலாய்த்து வருகின்றனர்.

கலைக்கான கோபம்: சில இயக்குநர்கள் சிரித்துக் கொண்டே நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு சில இயக்குநர்கள் தனக்கு தேவையான நடிப்பை நடிகர்களிடம் வாங்குவதற்காக அவர்களை அடிக்கவும் செய்கின்றனர் என குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில ஹாலிவுட் இயக்குநர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் கையில் நிஜ துப்பாக்கி எல்லாம் வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறது.

பாலா சர்ச்சை: பரதேசி படத்தின் படப்பிடிப்பின் போதே இயக்குநர் பாலா பலரை அடித்ததாக பஞ்சாயத்து வெடித்தது. பாலாவை நம்பி பணம் போட்டு நடிக்கத் தொடங்கிய சூர்யா சில மாதங்கள் சூட்டிங்கிற்கு சென்ற நிலையில், சில கோடிகள் செலவு செய்து வீணான நிலையில், படத்தை விட்டே வெளியேற காரணமே பாலா சூர்யாவையே படுத்தி எடுத்து விட்டது தான் காரணம் என பேச்சுக்கள் அடிபட்டன. சுரேஷ் காமாட்சி பேசும் போது பாலா சூர்யாவை ஓட விட்டு இருக்கலாம். ஆனால், அடிக்கவில்லை என்று பேசினார்.

மமிதா பைஜு பேட்டி: பிரேமலு படத்தின் மூலம் ஹிட் கொடுத்த மமிதா பைஜு இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக மாறியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலா தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் அடித்தார் என்பது போல பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அவர் அளித்த விளக்கத்தில் பாலா என்னை துன்புறுத்தவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ஆசை: இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலய்யாவை பாலா ஒரு படத்தில் இயக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். பாலகிருஷ்ணா முரட்டுத்தனமான நபர் என்றும் சூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் அடி வாங்காத ஆள் இல்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இருவரும் இணைந்தால் படப்பிடிப்பு தளத்தில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு ஒரே காமெடியாக இருக்கும் என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

Blue Sattai Maran says Director Bala will direct Balakrishna after Mamitha Baiju controversy arise

சிவகுமாரையும் சேர்த்துக்கோங்க: பாலய்யா வந்து சிவகுமாருடன் செல்ஃபி எடுப்பது போல ஒரு சீனையும் படத்தில் சேர்த்துக்கோங்க இன்னும் ரகளையாக இருக்கும் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். உண்மை தெரியாமல் பலரும் பாலாவை திட்டி விட்டனர் என சுரேஷ் காமாட்சி தற்போது மமிதா பைஜுவின் மறுப்பு வீடியோவை ஷேர் செய்து விளக்கம் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. வணங்கான் படத்தின் ரிலீஸுக்கு இந்த சர்ச்சை எல்லாம் சிக்கலை உண்டாக்காமல் இருந்தால் சரி என்கின்றனர்.

Blue Sattai Maran says Director Bala will direct Balakrishna after Mamitha Baiju controversy arise

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X