Blue Sattai Maran: மெட்ராஸ் படமே காப்பியா?.. பா. ரஞ்சித் பார்த்த வேலை.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’கத்தி’ படமே கோபி நயினாரின் கதை தான் என்கிற கதை திருட்டு சர்ச்சை வெடித்தபோது கூட அவர் பக்கம் நிற்காத பலரும் நயன்தாராவை வைத்து அறம் படத்தை கோபி நயினார் இயக்கியதும் அவர் பக்கம் நின்று பலரும் பேசினர்.

துப்பாக்கி படம் மட்டுமல்ல மெட்ராஸ் படமும் கோபி நயினாரின் படம் தான் என ப்ளூ சட்டை மாறன் தற்போது தொடர்ச்சியாக பல ட்வீட்களை பதிவிட்டு கோபி நயினார் எடுக்க முயன்ற கருப்பர் நகரம் படத்தின் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

Blue Sattai Maran Pa Ranjith Karuppar Nagaram

கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் ஏன் பிடிக்கவில்லை என பா. ரஞ்சித் பேசியதற்கு தொடர்ந்து தனது கருத்துக்கள் மூலம் பதிலடி கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது இப்படியொரு ட்வீட்களின் தொகுப்பை போட்டு பா. ரஞ்சித்தை பங்கம் பண்ணியுள்ளார்.

கருப்பர் நகரம் தான் மெட்ராஸ்?: ”கருப்பர் நகரம் எனும் தனது முதல் படத்தை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் தொடங்கினார் கோபி நயினார். ஹவுசிங் போர்ட், சுவர் அரசியல் மற்றும் ஃபுட்பால் சம்மந்தமான கதை. அப்போது அட்டகத்தி படத்தை இயக்கி வந்தார் பா.ரஞ்சித்.

ஹீரோவாக நடித்த அகில் என்பவரின் கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்னையால் கருப்பர் நகரம் ஷூட்டிங் தள்ளிப்போனது. அட்டகத்தி முடிந்ததும்.. அதே சத்யமூர்த்தி நகர் ஹவுசிங் போர்ட் பகுதி, சுவர் அரசியல் மற்றும் ஃபுட்பால் பின்னணியில் மெட்ராஸ் படத்தை எடுக்க ஆரம்பித்தார் ரஞ்சித். கருப்பர் நகரத்தின் காப்பிதான் மெட்ராஸ் எனும் சர்ச்சை எழுந்தது.

மெட்ராஸ் ரிலீஸ் சமயத்தில் 'இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என பெருந்தன்மையாக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோபி.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஏற்படும் பிரச்னையை வைத்து மற்றவர்கள் அரசியல் ஆதாயம் தேட நான் விரும்பவில்லை'என கூறினார் கோபி. அதன்பிறகு அவர் எடுத்த படம்தான்.. அறம்.” என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

கருப்பர் நகரம் - ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள்: ஹவுசிங் போர்ட், கால்பந்தாட்டம். என மெட்ராஸ் படத்தில் கார்த்தி மற்றும் கலையரசன் நடித்த காட்சிக்கு பதிலாக கோபி நயினார் உருவாக்க நினைத்த படத்தின் காட்சிகளை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.

கருப்பர் நகரம் - ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் 2: சுவர் மற்றும் அரசியல்வாதி என மெட்ராஸ் படத்தில் இடம்பெற்ற சுவர் அரசியல் பிரச்சனையை படமாக்கப்பட்ட காட்சிகளையும் அரசியல்வாதியாக நாகேஷின் மகன் ஆனந்தபாபு நடித்த காட்சியையும் வெளியிட்டுள்ளார்.

கருப்பர் நகரம் - ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் 3: 'மெட்ராஸ்' படத்தின் அன்பு (கலையரசன்) கேரக்டரை நினைவூட்டும் காட்சி என வரிசையாக மெட்ராஸ் படம் எப்படி உருவானது என்றும் அதன் பின்னால் உள்ள ஃபிளாஷ்பேக் மற்றும் சினிமா அரசியலை பாருங்க எனக் கூறியுள்ளார்.

கருப்பர் நகரம் - ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் 4: 'மெட்ராஸ்' படத்தின் காளி (கார்த்தி) மற்றும் அன்பு (கலையரசன் ஆகியோரை நினைவூட்டும் காட்சி என வெளியிட்டுள்ளார். மெட்ராஸ் படத்தை பார்த்த பின்னர் தான் ரஜினிகாந்த் பா. ரஞ்சித்துக்கு கபாலி மற்றும் காலா படங்களை இயக்கும் வாய்ப்பை அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோபி நயினார் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த கருப்பர் நகரம் உருவாகமல் போன நிலையில், மீண்டும் நடிகர் ஜெய்யை வைத்து ஒரு கருப்பர் நகரம் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X