ராகவா லாரன்ஸுக்கு இருக்குற நல்ல மனசு ரஜினிகாந்துக்கு இல்லையே.. ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் ட்வீட்!

சென்னை: தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை விட அதிகமாக உதவிகளை செய்து வரும் நடிகராக ராகவா லாரன்ஸ் உள்ளார். 100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களே பெரிய பெரிய உதவிகளை ரசிகர்களுக்கும் மக்களுக்கும் செய்ய தயங்கி வருகின்றனர்.

குறைந்தளவு சம்பாதித்தாலும் பலருக்கும் உதவும் மனசுடன் ராகவா லாரன்ஸ் வலம் வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து வரும் லாரன்ஸ் தற்போது திருமண மண்டபம் ஒன்றை தனது ரசிகர்களுக்காக கட்டப் போவதாக கூறியுள்ளார்.

Blue Sattai Maran says Raghava Lawrence trolls Rajinikanth with his Free marriage hall statement

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான ராகவா லார்னஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், வெற்றி விழாவில் இப்படியொரு வாக்குறுதியை ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நவம்பர் 10ம் தேதி வெளியான நிலையில், முதல் வாரத்தில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், இரண்டாவது வாரமான சனிக்கிழமையான இன்றும் நாளையும் நல்ல புக்கிங் நடைபெற்று வருகிறது. 30 கோடி வரை அந்த படம் இதுவரை வசூல் செய்துள்ளது என்றும் 2வது வாரமும் படம் நன்றாக ஓடும் என்பதால் 50 கோடி வசூலை நெருங்கும் என்றே தெரிகிறது.

திருமண மண்டபம்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை பலரும் பாராட்டி உள்ள நிலையில், வெற்றி விழா நடைபெற்றது. அதில் பேசிய ராகவா லாரன்ஸ் என்னை இந்த படத்தில் முற்றிலுமாக கார்த்திக் சுப்புராஜ் மாற்றி உள்ளார் என்றும் கூடிய விரைவிலேயே ஒரு திருமண மண்டபத்தை கட்ட முடிவு செய்துள்ளேன். அதில், தனது ரசிகர்கள் இலவசமாக திருமணம் செய்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

ரஜினியை கலாய்க்கிறார்: இந்நிலையில், அந்த செய்தியை பார்த்த ப்ளூ சட்டை மாறன் சும்மா இருப்பாரா என்ன? ”சீக்கிரம் ஒரு கல்யாண மண்டபம் கட்டப்போறேன். அங்க என் ரசிகர்கள் இலவசமா கல்யாணம் நடத்திக்கலாம் - லாரன்ஸ். தலீவரே... கேக்குதா? உங்களை கலாய்க்கத்தான் இப்படி பேசி இருக்காரு.” என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபம் கட்டியுள்ள நிலையில், இதுவரை இப்படியொரு அறிவிப்பை அவர் ரசிகர்களுக்காக செய்யவில்லை என்பதை ப்ளூ சட்டை மாறன் சுட்டிக் காட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X