ஊருக்கு உபதேசம்.. பார்ல சகவாசம்.. ரஜினிகாந்த் இரட்டை வேடம் போடுறாரு.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தயவு செஞ்சு யாரும் குடிக்காதீங்கன்னு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு தற்போது ஊருக்கு உபதேசம்.. பார்ல சகவாசம் என்கிற அளவுக்கு ஒரு பெரிய காரியத்தை செய்து இருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் அட்டாக் செய்துள்ளார்.

மாவீரன் படம் வெளியீட்டின் போது சிவகார்த்திகேயனை சீண்டி வந்த ப்ளூ சட்டை மாறன் அடுத்து ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து பங்கம் செய்து வருகிறார்.

Blue Sattai Maran says Rajinikanth handover his property for running a Bar shocks fans

இதேமாதிரி அடுத்து விஜய்யின் லியோ படத்துக்கும் ப்ளூ சட்டை மாறன் செய்வாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

பக்கா பப்ளிசிட்டி: ஒரு பக்கம் ஜெயிலர் படத்துக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வரை பிரம்மாண்டமான ப்ரோமோஷனை சன் பிக்சர்ஸ் செய்து மிரள விட்டு வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பாகவே ப்ரீ புக்கிங் ஆரம்பித்து ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி மாலையாக போட்டுக் கொண்டு மாஸ் காட்டி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் ஜெயிலர் படத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியாக தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்தை கார்னர் செய்து ட்ரோல் ட்வீட்களாக போட்டு வருகிறார். ஆக மொத்தம் ஜெயிலர் படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பப்ளிசிட்டிகள் பக்காவாக படத்தின் பாக்ஸ் ஆபிஸுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி இடத்தில் பார் நடக்குதா?: "ஊருக்கு உபதேசம். பார்ல சகவாசம்: 'தயவு செஞ்சி கேட்டுக்கறேன். யாரும் சரக்கு அடிக்க வேண்டாம்' என்று சமீப காலமாக அறிவுரை சொல்லி வருகிறது பவ்யமான பருந்து.

ஆனால் நிஜத்தில்... பருந்து செய்திருக்கும் செயலென்ன தெரியுமா? தலைநகரில் உள்ள நுங்குபாக்கம் பகுதியில் உள்ள பிரபல 'பனை தோப்பு' ஹோட்டலுக்கு அருகே பருந்திற்கு சொந்தமாக ஒரு ஹோட்டல் இருந்தது. அதற்கு 97 இல் வெளியான தனது படத்தின் பெயரை சூட்டியிருந்தது பருந்து.

தற்போது அதை மெயின்டெயின் செய்ய இயலாத காரணத்தால் இன்னொரு க்ரூப்பிற்கு கைமாற்றி உள்ளது. அங்கே தற்போது இருப்பது நூலகமோ, இலவச மருத்துவமனையோ இல்லை. பல மதுப்பிரியர்கள் வந்து செல்லும் Bar என்பதுதான் ஹைலைட்.

ஊருக்கு உபதேசம். ஆனால் தன் இடத்தில் பாருக்கு அனுமதி. பார்த்தீர்களா பருந்தின் இரட்டை வேடத்தை!!" என மறைமுகமாக நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதையை வைத்து தாக்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X