Blue Sattai Maran: சூரியின் சூரியப்பயணம்.. வடிவேலு பாணியில் அரசியல் ரூட்.. ப்ளூ சட்டை மாறன் பகீர்!

சென்னை: வடிவேலு போலவே திமுகவில் ஐக்கியமாகி விட்டார் நடிகர் சூரி என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார். பரோட்டா சூரியாக வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான சூரி தொடர்ந்து பல படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படம் சூரியின் லைஃபையே மாற்றி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

சிவகார்த்திகேயன் உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என பல படங்களில் சூரியின் காமெடி வேறலெவலில் வொர்க்கவுட் ஆனது. ஆனால், பல படங்களில் சூரியின் காமெடி குறித்த விமர்சனங்களும் அதிகளவில் எழுந்து வந்தன. சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறி வரும் நிலையில், காமெடி ஹீரோவாக இல்லாமல் கதையின் நாயகனாக மாற வேண்டும் என சூரி எடுத்த முயற்சி அவருக்கு சூப்பராகவே கைகொடுத்தது.

Blue Sattai Maran says Soori joined DMK like Vadivelu

நடிப்பின் நாயகனான சூரி: வெற்றிமாறனின் விடுதலை முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சினிமா பிரபலங்கள், விமர்சகர்கள் என பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் அணிவகுத்து நிற்கிறது. அதே போல இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்திலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பார்த்த சூரி: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை நடிகர் சூரி நேரில் சென்று பார்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் அருகே சூரி அமர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தார்.

சூரியின் சூரியப்பயணம்: இந்நிலையில், திமுகவில் சூரி ஐக்கியமாகி விட்டார் என ப்ளூ சட்டை மாறன் சூரியை ட்ரோல் செய்து போட்டுள்ள பதிவு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. "திமுக, பாஜக, நீலம், அக்னி என ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதில் சூரியும் சேர்ந்திருப்பது ஆச்சர்யமில்லை.

உதயநிதியுடன் நடிப்பது, திமுகவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என வடிவேலுவின் ரூட்டில் இவர் பயணித்து வருகிறார்.

சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும் ஆகிய படங்களில் உதயநிதியுடன் நடித்தார். அதன் பிறகு மதுரை வட்டார திமுக தலைவர்களுடன் பரிச்சயமானார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உணவு கேன்டீன் நடத்த சூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனை அமைச்சர் PTR. பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Blue Sattai Maran says Soori joined DMK like Vadivelu

வடிவேலுவை போல: கடந்த சில ஆண்டுகளாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் வரிசை விஐபி இருக்கையில் உதயநிதிக்கு அருகே சூரிக்கு இடம் தரப்படுகிறது. சக மதுரைக்காரர் வடிவேலுவை பின்பற்றி... தற்போது அவரை ஓவர்டேக் செய்து வருகிறார் சூரி.

2026 தேர்தலில் திமுகவிற்காக பிரச்சாரம், அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து மதுரை எம்.எல்.ஏ.சீட் என காய்களை நகர்த்த திட்டமிட்டு வருகிறார் என அரசியல் சார்ந்த நிபுணர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்." என ப்ளூ சட்டை மாறன் சூரி குறித்து பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X